இதை செஞ்சா போதும்.. உங்களால் ஃபார்முக்கு வந்து 360 டிகிரியில் அடிக்க முடியும்.. ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 21ஆம் தேதி துவங்கியது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அத்தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அசத்துவது முக்கியமாகிறது.

தாமதமாக 31 வயதில் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் குறுகிய காலத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய சூரியகுமார் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்பட்டார். தொடர்ந்து அசத்திய அவருக்கு நாளடைவில் இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஃபார்முக்கு திரும்ப:

இருப்பினும் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பேட்டிங்கில் சூரியகுமார் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். எனவே 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றிக்கு நியூசிலாந்து தொடரில் அவர் ஃபார்முக்கு வருவது அவசியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூரியகுமார் ஃபார்முக்கு திரும்ப ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சிக்காமல் கொஞ்சம் நிதானத்தைக் காட்ட வேண்டுமென்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான சமயங்களில் கீழ் கையைப் பயன்படுத்தி விளையாடும் சூரியகுமார் ஆஃப் சைட் திசையிலும் நேராகவும் அடிக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமாரின் ஆட்டம் இப்போதும் அவருடைய கீழ் கையால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது”

- Advertisement -

சிறிய அட்வைஸ்:

“பின்னால் அடிக்கடிக்கூடிய 360 டிகிரி ஷாட்டுகளை அவர் தன்னுடைய கீழ்கையை அதிகம் பயன்படுத்தி அடிக்கிறார். ஆனால் தற்போது அவர் தமக்குத்தாமே களத்தில் கொஞ்சம் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். தம்மால் ஆஃப் சைட் திசையிலும் அடிக்க முடியும் என்றும் அவர் தமக்குத்தாமே நினைவுக்கொள்ள வேண்டும். இதற்கு முன் அவற்றை செய்ததாலேயே அவரை நாம் 360 டிகிரி பிளேயர் என்றழைத்தோம்”

இதையும் படிங்க: இதுக்காக தற்காலிகமா கழற்றி விட்ருக்காங்க.. சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 கேப்டனாவாரு.. மைக்கேல் கிளார்க்

“லெக் சைட் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் அவரால் ரன்கள் குவிக்க முடியும். அதே போல லெக் சைட் திசையில் அடிக்கும் ஷாட்டுகளை அவர் கொஞ்சம் நேராக அடிக்க முயற்சிக்க வேண்டும். ஸ்கோர் செய்ய தமக்கு நிறைய வழிகள் இருக்கிறது என்பதை அவர் நினைவு கூற வேண்டும். களத்திற்கு வந்ததும் முதலில் அவர் மைதானத்திற்கு நேராக தரையோடு தரையாக அடிக்கப் பார்க்க வேண்டும். ஏனெனில் சமீபத்திய போட்டிகளில் அவர் ஏரியல் ஷாட்டுகளை அடித்து அவுட்டானார்” என்று கூறினார்.

Advertisement