22 வயதிலேயே பலரால் முடியாததை.. ஆஸியில் சாதிச்ச நிதிஷ்க்கு.. டைம் கொடுக்காம திட்டாதீங்க.. விஹாரி ஆதரவு

Hanuma Vihari
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த நியூஸிலாந்து தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 285 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக கேஎல் ராகுல் சதமடித்து 112, கேப்டன் கில் 56 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் அசத்தவில்லை. அடுத்து விளையாடிய நியூசிலாந்து 47.3 ஓவரிலேயே 286/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 131*, வில் எங் 87, கிளன் பிலிப்ஸ் 32 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

நிதிஷ் ரெட்டிக்கு:

முன்னதாக அப்போட்டியில் காயத்தால் வெளியேறிய வாசிங்டன் சுந்தருக்கு பதிலாக நிதீஷ் ரெட்டிக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் பந்து வீச்சில் 20 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதை விட பந்து வீச்சில் வெறும் 2 ஓவர்களை மட்டுமே போட்ட அவர் 13 ரன்கள் கொடுத்தார்.

மொத்தத்தில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதை பல ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் வெறும் 22 வயதாகும் நிதிஷ் ரெட்டிக்கு போதுமான நேரத்தையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹனுமா விகாரி தெரிவித்துள்ளார். அதற்குள் அவரை எப்போதாவது மட்டுமே அசத்தக்கூடிய என்ற விமர்சிப்பது முறையல்ல என்றும் விஹாரி பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

விஹாரி ஆதரவு:

அத்துடன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதமடிக்க வேண்டும் என்பது பல வீரர்களின் கனவு என்று அவர் கூறியுள்ளார். அதை 22 வயதிலேயே செய்துள்ள நித்திஷ் ரெட்டிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த அளவில் நித்திஷ் ரெட்டி போல நமது நாட்டில் 22 வயதில் பேட்டிங், பவுலிங் செய்யக்கூடியவர் இருக்கிறாரா? என்று யாராவது இடம் சொல்லுங்கள்”

இதையும் படிங்க: அப்படினா எல்லாரும் சச்சின் ஆகிருப்பாங்களே.. கோலியை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கருக்கு ஹர்பஜன் பதிலடி

“அதற்குள் 22 வயதாகும் ஒரு இளம் வீரரை நீங்கள் அவ்வப்போது அசத்தக்கூடியவர் என்று சொல்லி எழுதலாமா? இதுவரை அவர் 3 ஒருநாள் போட்டிகளில் 7 ஓவர்கள் வீசியுள்ளார். 4 டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை 7.88 எகனாமியில் எடுத்துள்ள அவர் பேட்டிங்கில் 45 சராசரியைக் கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 86 ஓவர்கள் 8 விக்கட்டுகள் எடுத்துள்ளார். இது 4வது பவுலருக்கு மோசமான ரெக்கார்ட் கிடையாது. அத்துடன் அவர் மெல்போர்னில் சதமடித்துள்ளார். அது என்னையும் உங்களையும் போன்ற பலருக்கு கனவாகும்” என்று கூறியுள்ளார்.

Advertisement