ஆயுஷ் பதோனியை இந்திய அணிக்கு தேர்வு செய்தது ஏன்? பேட்டிங் கோச் அளித்த பேட்டி – விவரம் இதோ

Ayush Badoni
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பந்து வீசுகையில் விலா எலும்பு பகுதியில் காயமடைந்தார். இதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரால் இந்த தொடரில் தொடர்ந்து விளையாட முடியாது என்று உறுதி செய்யப்பட்டது.

ஆயுஷ் பதோனியை தேர்வு செய்தது ஏன்? :

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். இப்படி வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இருந்து வெளியேறியது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்திய அணியில் இருந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்று வீரரையும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அந்தவகையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்காக மாற்று வீரராக டெல்லியை சேர்ந்த ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக ஏராளமான இளம் வீரர்கள் திறமையுடன் காத்திருக்கும் வேளையில் இப்படி ஆயுஷ் பதோனிக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படி இந்திய ஒருநாள் அணிக்கு ஆயுஷ் பதோனியை தேர்வு செய்வது எதற்காக என்ற காரணத்தை தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கோடக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஆயுஷ் பதோனி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அதோடு அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன் குவித்து வருவது மட்டுமின்றி பந்து வீச்சிலும் கைகொடுத்து வருகிறார். நம்மால் ஒருநாள் போட்டிகளில் ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு விளையாட முடியாது. பகுதிநேரமாக பந்துவீசும் வீரர்கள் தேவை. அவ்வப்போது 4-5 ஓவர்கள் வீசும் வீரர்கள் எப்போதுமே நமது அணிக்கு தேவை.

இதையும் படிங்க : 34 ரன்கள் மட்டுமே தேவை.. அதிவேக இந்திய வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தவுள்ள சாதனை – விவரம் இதோ

அந்த வகையில் தான் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனியை தேர்வு செய்துள்ளோம். அவரால் பேட்டிங் செய்வது மட்டுமின்றி பந்துவீச்சிலும் சில ஓவர்கள் கை கொடுக்க முடியும் என்பதினாலே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு திறமையை வைத்து காத்திருக்கும் வீரர்களுக்கு இது போன்ற ஒரு வாய்ப்பு வழங்குவதில் தவறு கிடையாது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement