2023இல் நினைக்காத ஓய்வை 2025இல் அறிவித்த விராட், ரோஹித் 2027 உ.கோ சந்தேகம் தான்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக சொல்லி அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முயற்சித்து வருகிறார்கள்.

அதனுடைய முதல் படியாகவே ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தார். மேலும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய அவர் தன்னுடைய தரத்தை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

2027 உ.கோ சந்தேகமே:

அதே போல கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலி உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் 2025/26 விஜய் ஹசாரே கோப்பையில் சதமடித்த அவர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அதனால் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக விளையாடுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் வருங்காலத்தில் எதையும் உறுதியாக சொல்ல முடியாத இவ்வுலகில் விராட், ரோஹித் 2027இல் விளையாடுவது சந்தேகம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் எடுத்துக்காட்டுடன் விளக்கியது பின்வருமாறு. “ஒருவேளை லண்டன் ஓவலில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது, நீங்கள் 2025 இறுதிப் போட்டிக்கு முன் ஓய்வு பெறுவீர்களா? என்று ரோஹித் சர்மாவிடம் கேட்டிருந்தால் அவர் நம்முடைய முகத்தில் சிரித்திருப்பார்”

- Advertisement -

உறுதியா சொல்ல முடியாது:

“விராட் கோலியும் அதையே செய்திருப்பார். ஆனால் அடுத்த 2 வருடங்களுக்குள் இப்போது பார்த்தால் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள். அதே போல அடுத்த 2 வருடங்களில் 2027இல் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. 2026 இப்போது தான் துவங்கியுள்ளது. அடுத்த உலகக்கோப்பை 2027ஆம் ஆண்டின் 2வது பகுதியில் நடைபெறுகிறது. எனவே நமக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது”

இதையும் படிங்க: இந்த ஃபிட்னெஸ் போதுமா? 31 பந்தில் 75 ரன்ஸ்.. 3 விக்கெட்ஸ்.. அகர்கருக்கு டபுள் திறமையை நிரூபித்த பாண்டியா

“என்னைப் பொறுத்த வரை பேட்டிங்கில் நமக்கு தரமும் அனுபவமும் தேவை. அது போன்ற சூழ்நிலையில் அவர்கள் விளையாடுவது சிறந்தது. மறுபுறம் தேர்வுக்குழுவினர் எப்போதும் இளம் வீரர்களை விளையாட வைக்க முயற்சிக்கின்றனர். ஒருவேளை விராட், ரோஹித் ஓய்வு பெற விரும்பினால் நீங்கள் வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் இந்திய அணிக்காக விளையாடுவது நல்லது” என்று கூறினார்.

Advertisement