இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது குறித்து மவுனம் கலைத்த தேவ்தத் படிக்கல் – விவரம் இதோ

Devdutt Padikkal
- Advertisement -

இந்திய அணியின் இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் சீனியர் வீரர்களின் இருப்பு காரணமாக பின்னர் இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்டார்.

இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது குறித்து : தேவ்தத் படிக்கல் பேச்சு

அதேபோன்று இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 90 ரன்களை அடித்து இருந்தாலும் இந்திய அணியில் நிலவும் வீரர்களுக்கு இடையேயான பலமான போட்டி காரணமாக அவருக்கு டெஸ்ட் அணியிலும் இடம் பறிபோனது. ஆனாலும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் முயற்சியை அவர் கைவிடவில்லை.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரின் முதல் 5 போட்டிகளில் 4 சதம் விளாசி மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவாரா? என்ற பேச்சு கடந்து சில வாரமாகவே இருந்து வந்தது.

ஆனால் அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடரில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : நியூசிலாந்து தொடரில் எனக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளித்திருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் அணித்தேர்வை நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அணியில் என்ன நடக்கப்போகிறது? என்பதையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இந்திய அணியில் தற்போது ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் எல்லோருமே மிகச் சிறப்பாக விளையாடி வருவதால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று புரிந்து கொண்டேன்.

இதையும் படிங்க : 35வது முறை.. பஸ்பாலை பொய்யாக்கி ஆஸி வரலாற்று வெற்றி.. இங்கிலாந்து தலைக்குனியும் தோல்வி

ஆனாலும் இந்திய அணிக்குள் நுழைவதற்காக என்னுடைய உழைப்பை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன். இந்திய அணியில் நுழைவது என்பது எளிதான காரியம் கிடையாது. ஒரு கிரிக்கெட் வீரராக அந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வேன். இருப்பினும் நான் தொடர்ந்து ரன்களை குவித்துக் கொண்டே இருக்கப்போகிறேன். அதன் பின்னர் எனக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என படிக்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement