டி20 வேர்ல்டுகப்ல ஆடலனா என்ன? அடுத்தகட்ட பயணத்தை துவங்கவுள்ள சுப்மன் கில் – விவரம் இதோ

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்த மாதம் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி மீண்டும் ஒருமுறை வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தகட்ட வேலையை துவங்கிய சுப்மன் கில் :

அதோடு சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் பி.சி.சி.ஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் மீண்டும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது டி20 போட்டிக்கு துணை கேப்டனாக கம்பாக் கொடுத்த சுப்மன் கில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தினார்.

அதன் காரணமாகவே உலககோப்பை டி20 அணியில் இருந்து அதிரடியாக கழட்டிவிடப்பட்டுள்ளார். இப்படி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து அவர் கழித்து விடப்பட்டாலும் தற்போது அடுத்த இலக்கினை நோக்கி சுப்மன் கில் தனது பயணத்தை ஆரம்பித்து விட்டார் என்று கூறலாம்.

- Advertisement -

அந்த வகையில் அடுத்த ஆண்டு 2027-ல் ஒருநாள் உலக கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அந்த தொடரில் வெற்றி பெறுவதற்காக தற்போதில் இருந்தே சுப்மன் கில் தீவிர முனைப்புடன் தயாராகி வருகிறார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்தே அவர் அடுத்த உலக கோப்பையை கருத்தில் கொண்டு அந்த அணி எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வங்கதேசம் வரல்லன்னா.. உ.கோ மட்டுமல்ல சாம்பியன்ஷிப்லயும் இந்தியாவுக்கு பாதிப்பில்ல.. ஆகாஷ் சோப்ரா

ஒருநாள் உலககோப்பை தொடருக்கு இன்னும் 1 ஆண்டு மட்டுமே உள்ள நிலையில் நிலையான மற்றும் பலமான அணியை சுப்மன் கில் தலைமையில் கட்டமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி வடோதராவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement