ஷ்ரேயாஸ் ஐயர் ஒருவேளை ஆடலனா அந்த 4 ஆவது இடத்தில் விளையாட இவர் ஒருத்தர் தான் இருக்காரு – விவரம் இதோ

Shreyas Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ-யின் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த இந்திய அணியில் சுப்மன் கில் தலைமையில் 15 பேர் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக விளையாடப்போவது யார்? :

இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய தொடரின் போது காயத்தை சந்தித்த இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது கேட்ச் பிடிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்து சில மாதங்களாகவே சிகிச்சையில் இருந்து வந்த அவர் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் இடம் பெற்றுள்ளார். ஆனாலும் முழுமையாக காயத்திலிருந்து மீண்ட ஷ்ரேயாஸ் ஐயர் 50 ஓவர் பீல்டிங் செய்யும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே இந்த ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டிங்கில் எந்த ஒரு சிரமத்தையும் சந்திக்காத அவர் பீல்டிங்கின் போது களத்தில் ஒருநாள் முழுவதும் நிற்பாரா? என்பது தான் தற்போது பலரது மத்தியிலும் இருக்கும் கேள்வியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவரால் முழு உடற்தகுதியுடன் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடப் போகும் அந்த வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு பதிலாக நான்காவது இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ருதுராஜ் கெய்க்வாட் இந்த நியூசிலாந்து தொடரில் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதன் காரணமாக அவரால் இந்த தொடரில் விளையாட முடியாது. அதே வேளையில் ஜெய்ஸ்வால் துவக்க வீரர் என்பதனால் அவராலும் இந்த நான்காவது இடத்தில் விளையாட முடியாது.

இதையும் படிங்க : நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா சேர்க்கப்படாதது ஏன்? – காரணம் இதோ

அப்படி பார்க்கையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக நான்காவது இடத்தில் விளையாட ரிஷப் பண்ட்டிற்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஏனெனில் முதன்மை விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் விளையாடும் வேளையில் நான்காவது இடத்தில் ஒரு முழுநேர பேட்ஸ்மேன் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நியூசிலாந்து தொடரில் முழுநேர பேட்ஸ்மேன் யாரும் இடம் பெறாத வேளையில் கூடுதல் பேட்ஸ்மேனாக இணைக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் தான் நான்காவது இடத்தில் விளையாட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement