இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்து சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டது பெருமளவு ஏமாற்றத்தை அளித்திருந்தது.
ரோஹித் மற்றும் கோலி இருக்கும் வரை ருதுராஜ் கெய்க்வாடுக்கு இடம் கிடைக்காது :
ஏனெனில் கடைசியாக அவர் விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பண்டிற்கு இடம் வழங்கியது தவறு என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவர் இருக்கும் வரை ருதுராஜ் கெய்க்வாடுக்கு ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காது என்ற வெளிப்படையான விமர்சனத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அவருக்கு அணியில் இடம் கொடுப்பது என்பது முற்றிலும் சரியான ஒரு முடிவு. ஏனெனில் அது அவருடைய இடம் ஆனால் இங்குள்ள பிரச்சனையே ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கியது தான் தவறு.
ஏனெனில் என்னை பொருத்தவரை இந்திய ஒருநாள் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பரை சேர்ப்பதற்கு பதிலாக மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்யும் ஒரு முழுநேர பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் பார்க்கையில் ரிஷப் பணட்டை விட ருதுராஜ் கெய்க்வாட் தான் ஒரு மிகச் சிறப்பான தேர்வாக அமைவார். நான்கு அல்லது ஐந்து இடங்களில் விளையாடும் வீரராக நான் அவரை பார்க்கிறேன்.
இதையும் படிங்க : ஷமிக்கு அநியாயம் பண்ணிட்டீங்க.. சர்வதேச வீரர்கள் செய்யாததை செஞ்சும் அவமானப் படுத்திட்டீங்க.. கோச் விளாசல்
ஏனெனில் சிறப்பாக பேட்டிங் செய்யும் அவர் கிரீசுக்கு இடையே நல்ல வேகமாக ரன் ஓடக்கூடியவர். அதுமட்டுமின்றி போட்டியை சரியான வகையில் முடித்துக் கொடுக்கும் திறமையும் அவரிடம் உள்ளதால் அவரையே இந்திய அணி தேர்வு செய்திருக்க வேண்டும். இந்திய ஒருநாள் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சென்ற பிறகு தான் கிடைக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் காட்டமான கருத்துக்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



