100க்கு 10இல் அசத்திய கபில் தேவ் விட மோசமா? சுப்மன் கில்லை ஏன் ட்ராப் பண்ணீங்க.. யோக்ராஜ் விளாசல்

Yograj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றி பெறுவதற்காக தயாராகி வருகின்றது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். ஏற்கனவே 2023இல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சுமாராக விளையாடியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் இங்கிலாந்தில் 750+ ரன்கள் குவித்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதை வைத்துக்கொண்டு அவரை தேர்வுக்குழு 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக வளர்க்க முடிவெடுத்தது. அதனால் இந்திய டி20 அணியில் அவரை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தது.

- Advertisement -

நீக்கப்பட்ட கில்:

அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசியாக களமிறங்கிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடினார். அதனால் அணியை விட யாரும் முக்கியமில்லை என்று முடிவெடுத்த தேர்வுக்குழு அவரை கழற்றி விட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் ஜாம்பவனாக போற்றப்படும் கபில் தேவ் கூட 100க்கு 10 போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடியதாக முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு அப்போதைய கேப்டன் பிஷன் சிங் பேடி தொடர்ந்து வாய்ப்பளித்ததாகவும் யோக்ராஜ் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சுப்மன் கில்லை கடைசி நேரத்தில் கழற்றி விட்டது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் துணைக் கேப்டன். இருப்பினும் அவரை நீக்கியதற்கான பின்னணி காரணம் என்ன?”

- Advertisement -

யோக்ராஜ் விளாசல்:

“4 – 5 இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடாததால் அவரை நீக்கியுள்ளீர்களா? கடந்த காலங்களில் நிறைய இந்திய வீரர்கள் 100 வாய்ப்புகளில் 10இல் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளார்கள். இருப்பினும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியும். சில மாதங்களுக்கு முன் அறிமுகமான அபிஷேக் சர்மா அடுத்ததாக 4 போட்டிகளில் சொதப்பினால் அவரையும் நீங்கள் அணியிலிருந்து நீக்குவீர்களா?”

இதையும் படிங்க: இன்னும் 94 ரன்கள் போதும்.. நியூசி அணிக்கெதிரான சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி

“இங்கே சிறப்பான கபில் தேவை நான் எடுத்துக்காட்டாக கொண்டு வருகிறேன். நாங்கள் பாகிஸ்தானுக்கு பிஷன் சிங் பேடி தலைமையில் சென்ற போது பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே நன்றாக விளையாடாத போதும் கபில் தேவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அடுத்த நடைப்பெற்ற இங்கிலாந்து தொடருக்கும் பிஷன் சிங் பேடி அவரை அழைத்துச் சென்று ஆதரவளித்தார்” என்று கூறினார்.

Advertisement