412 ரன்ஸ்.. தனித்துவ உலக சாதனை போட்டியில் போராடிய.. இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிரணி

IND vs SL 2
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வென்ற இனிய மகளிரணி ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய நிலையில் 4வது போட்டி டிசம்பர் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் இலங்கையை அடித்து நொறுக்கி 221/2 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் தங்களது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனையும் படைத்தது.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

இந்திய அணிக்கு 162 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கம் கொடுத்த ஸ்மிரிதி மந்தனா 80 (48), ஷபாலி வெர்மா 79 (46) ரன்கள் குவித்தார். அவர்களுடன் ரிச்சா கோஸ் 40* (16), கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 16* (10) ரன்கள் குவித்து இந்தியாவை வலுப்படுத்தினார்கள். அடுத்ததாக விளையாடிய இலங்கைக்கு 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹாசினி பெரேரா 33 (20) ரன்கள் விளாசி அவுட்டானார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு அரை சதமடித்து 52 (37) ரன்களை குவித்துப் போராடி அவுட்டானார். மிடில் ஆர்டரில் இமேசா துலானி 29 (28), ஹர்ஷிதா சமரவிக்ரமா 20 (13) ரன்களை எடுத்து அவுட்டானார்கள். லோயர் ஆர்டரில் கவிதா திலாரி 13 (8), நீலாக்ஷிகா சில்வா 23* (11), ரஸ்மிக்கா 5, கௌஷானி 5* (2) ரன்களை எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள்.

- Advertisement -

உலக சாதனை போட்டி:

அதனால் 20 ஓவரில் 191/6 ரன்களை எடுத்த இலங்கை போராடி தோல்வியை சந்தித்தது. மறுபுறம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 – 0* (5) என்ற கணக்கில் இந்த தொடரில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக வைஷ்ணவி சர்மா, அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

இதையும் படிங்க: 10000 ரன்ஸ்.. இந்தியாவின் மந்தனா அதிரடி உலக சாதனை.. உலகின் 4வது வீராங்கனையாகவும் சாதனை

முன்னதாக இந்தப் போட்டியில் இரு அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் யாருமே சதமடித்ததில்லை. இருப்பினும் 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 412 ரன்கள் குவித்தன. இதன் வாயிலாக ஒரு சதம் கூட அடிக்கப்படாமலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த மகளிர் சர்வதேச டி20 போட்டியாக இப்போட்டி உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு 2024இல் நவி மும்பையில் நடைபெற்ற இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியில் சதமடிக்கப்படாமல் 374 குவிக்கப்பட்டதே முந்தைய சாதனை.

Advertisement