அடுத்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாட இருக்கும் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அக்சர் படேல் துணை கேப்டனாக கம்பீர் தான் காரணம் : மான்டி பனேசர்
இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அந்த அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் இந்த உலககோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டதோடு அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக மாறியது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் அக்சர் பட்டேல் மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட காரணம் என முன்னாள் இங்கிலாந்து வீரரான மான்டி பனேசர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை சுப்மன் கில் நீக்கப்பட்டு அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட காரணமே இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என்று நினைக்கிறேன். ஏனெனில் கௌதம் கம்பீருக்கு பொதுவாகவே ஆல்ரவுண்டர்களை மிகவும் பிடித்திருக்கிறது என்று அனைவருக்குமே தெரியும்.
அதன் காரணமாகவே டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி அனைத்து வகையான போட்டிகளிலும் இந்திய அணியில் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். அதனால் தான் பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேலை துணை கேப்டனாக நியமிக்க கம்பீர் விருப்பப்பட்டு இருக்கலாம் என்று மான்டி பனேசர் கூறினார்.
இதையும் படிங்க : 2026 டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் இவர்தான்.. நிர்வாகத்தால் ஏற்படவுள்ள – அதிரடி மாற்றம்
ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கு முன்னர் டி20 போட்டிகளின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அதனால் அவரே டி20 உலககோப்பை தொடரிலும் துணை கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுப்மன் கில்லின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



