2027 உ.கோ தொடரில் விராட் கோலி விளையாடுவாரா? ராஜ்குமார் சர்மா அளித்த பதில் – விவரம் இதோ

Rajkumar Sharma and Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் அவர் 2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து தொடர்ச்சியாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடரிலும் விளையாடியிருந்தார்.

2027 உலககோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவாரா? : ராஜ்குமார் சர்மா பதில்

நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அவர் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். அதோடு அதற்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரிலும் அசத்தியிருந்தார். அதோடு தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் சதமடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதனால் நிச்சயம் அவர் 2027 ஒருநாள் உலககோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் நிர்வாகம் ஒருவகையான போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவதால் அவரது வயதை கணக்கில் காட்டி நிராகரிக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விராட் கோலி 2027 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா கூறுகையில் : விராட் கோலி இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். அவரைப்போன்று இத்தனை வெற்றிகளை பெற்ற வீரரை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறன்.

- Advertisement -

அவர் என்னுடைய மாணவர் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. இதைவிட எனக்கு வேறென்ன பெருமை இருக்கிறது. விராட் கோலி இன்னும் அற்புதமான பேட்டிங் பார்மில் இருந்து வருகிறார். விஜய் ஹசாரே ட்ராபியில் கூட முதல் போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி ஜெயிக்கனும்னா ரவி சாஸ்திரி தான் ஹெல்ப் பண்ணனும் – மான்டி பனேசர் கருத்து

விராட் கோலி தனது கரியரின் ஆரம்பத்தில் எவ்வாறு விளையாடினாரோ அதேபோன்று இன்றளவும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு இன்றும் அவர் தனது உடற்தகுதியில் மிகவும் பிட்டாக இருக்கிறார். எனவே எதிர்வரும் 2027 உலககோப்பை தொடரில் கண்டிப்பாக விளையாடுவார் என்றும் அதற்கான முழு தகுதி அவரிடம் உள்ளது என ராஜ்குமார் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement