ஜார்கண்ட் முதல் கோப்பை வெல்ல.. தோனி தான் இவ்வளவு உதவிகளை செஞ்சாரு.. செயலாளர் நதீம் பேட்டி

Shabhaz Nadeem
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற சயீத் முஸ்டாக் அலி 2025 கோப்பை உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் இஷான் கிசான் தலைமையிலான ஜார்க்கண்ட் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய ஜார்கண்ட் 11க்கு 10 வெற்றிகளைப் பெற்று கோப்பையை வென்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் ஹரியானாவை வீழ்த்திய ஜார்கண்ட் முதல் முறையாக கோப்பையை வென்றது.

அந்த வெற்றிக்கு இறுதிப் போட்டியில் சதமடித்த இசான் கிசான் ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். மேலும் அந்தத் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் நல்ல ஃபார்மில் அசத்தி வருகிறார். அதனால் கடைசி நேரத்தில் அவருக்கு 2026 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

ஜார்கண்ட் சாதனை வெற்றி:

பொதுவாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று கோப்பைகளை வெல்வது அரிதான ஒன்றாகும். அந்தளவுக்கு பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வெற்றிகளைப் பெறத் துவங்கியுள்ளது. இந்நிலையில் 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பையை ஜார்க்கண்ட் அணி வெல்வதற்கு ஜாம்பவான் எம்.எஸ். தோனி பின்னணியில் முக்கிய பங்காற்றியதாக சபாஷ் நதீம் தெரிவித்துள்ளார்.

ராஞ்சியை சேர்ந்த தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிகளை பெற்று வரலாற்றின் மிகச் சிறந்த கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதனால் ஜார்கண்ட் மாநிலத்திற்கே அடையாளமாக விளங்கும் தோனி இளம் வீரர்களை கண்டறிவதில் தங்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளதாக சபாஷ் நதீம் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய வீரரான சபாஷ் நதீம் தற்போது ஜார்க்கண்ட் வாரியத்தின் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

பின்னணியில் தோனி:

அந்த நிலைமையில் தங்களது மாநில அணியை முன்னேற்றுவதற்கு தோனி செய்யும் உதவிகள் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருடத்தின் சீசன் துவங்கிய போது, பயிற்சியாளர்களை நியமனம் செய்வது முதல் நாங்கள் எப்போதும் தோனியின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டோம். சயீத் முஸ்டாக் அலி கோப்பையை தோனி முழுமையாகப் பின்பற்றினார்”

இதையும் படிங்க: 50 ஓவரில் 576 ரன்ஸ்.. இதுக்காக இந்தியா கவலைப்படனுமே தவிர கொண்டாடக் கூடாது.. ஹர்ஷா போக்லே பதிவு

“அந்தத் தொடரில் எங்கள் வீரர்களின் பலம், பலவீனங்களை குறித்துக்கொண்ட அவர் அது பற்றி எங்களிடம் விவாதித்தார். தற்போதைய ஜார்க்கண்ட் அணிக்காக உள்ளூரில் விளையாடும் ஒவ்வொரு வீரரின் புள்ளிவிவரங்கள் மற்றும் நம்பர்கள் தோனிக்கு தெரியும். அந்த வகையில் ஜார்க்கண்ட் அணி வளர்வதற்கு தேவையான உதவிகளைச் செய்ய தோனி மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement