இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த இந்திய அணியின் பட்டியல் வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுப்மன் கில்லை நீக்கியது ரொம்ப தவறு : சஞ்சய் மஞ்சரேக்கர்
ஏனெனில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். இப்படி தென்னாப்பிரிக்க தொடர் வரை டி20 போட்டிகளின் துணை கேப்டனாக இருந்த ஒருவரை திடீரென நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக புதிய வீரரை தேர்வு செய்ய என்ன காரணம்? என்று பலரும் பேசி வருகின்றனர்.
இந்தாலும் சுப்மன் கில் தற்போது மோசமான பேட்டிங் இருப்பதனால் அவரை வெளியேற்றியது சரிதான் என்று ஆதரவுகளும் குவிந்து வருகிறது. அதேசமயம் மற்றொருபுறம் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் அவரை இப்படி திடீரென அணியில் இருந்து நீக்கியது தவறு என்று ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிகள் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் இந்திய அணியின் நிர்வாகம் சுப்மன் கில்லை டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு என்று தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
சுப்மன் கில்லை டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்காதது என்னை பொறுத்தவரை தேர்வாளர்கள் செய்த தவறுதான் என்று கூறுவேன். ஏனெனில் இங்கிலாந்து தொடரின் போது அட்டகாசமான பார்மில் இருந்த அவர் அடுத்த நிரந்தர கேப்டனாகவும் பார்க்கப்பட்டார். இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு அடுத்தடுத்து தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடி வந்த வேளையில் டி20 போட்டிகளில் அவரால் ரன் குவிக்க முடியவில்லை என்பது உண்மைதான்.
இதையும் படிங்க : 10 வருஷம் ஆச்சு.. ஒருவழியா டி20 போட்டிகளில் முக்கிய மைல் கல்லை எட்டிய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ
ஆனாலும் அவர் ஒரு மிகச்சிறந்த டி20 பிளேயர். அவருக்கான நேரத்தை கொடுத்தால் அவர் நிச்சயம் மீண்டும் பார்மிற்கு வந்து அசத்த வாய்ப்பு உள்ளது. அதனால் அவசரப்பட்டு அவரை நிர்வாகம் நீக்கி விட்டதோ என்றும் தோன்றுவதாக சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



