ரிங்கு சிங் அணியில் இருப்பதால் இந்த கூடுதல் சாதகம் இருக்கு.. அதனால் தான் அவரை சேர்த்தோம் – அஜித் அகார்கர் விளக்கம்

Rinku Singh and Agarkar
- Advertisement -

எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் இரண்டு முக்கிய மாற்றங்களும் நிகழ்த்தப்பட்டிருந்தது. அந்த வகையில் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் புதிய துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரிங்கு சிங்கை சேர்க்க இதுதான் காரணம் : அஜித் அகார்கர்

மேலும் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிங்கு சிங் அணியில் இடம் பிடித்துள்ளார். இப்படி ரிங்கு அணியில் இடம் பிடித்தது பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் பினிஷராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதனால் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது சரியான ஒன்றுதான் என்றும் அவருக்கு நிச்சயம் இந்த டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 42 ரன்கள் சராசரியுடன் 550 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

எனவே அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கை சேர்த்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்த சில கருத்துக்களை இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

ரிங்கு சிங்கை இந்திய அணியில் தேர்வு செய்ததற்கு காரணமே அவர் அணியில் இருந்தால் லோயர் மிடில் ஆர்டரின் பலம் அதிகரிக்கும். அதன் காரணமாகவே அவர் இடம் பிடித்துள்ளார். இருந்தாலும் அணியின் காம்பினேஷன் எப்படி இருந்தால் பலமாக இருக்குமோ அதற்கேற்றார் போல் அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பாரா? இல்லையா? என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை தொடரில் இஷான் கிஷனை தேர்வு செய்ய என்ன காரணம்? – விவரம் இதோ

அதேபோன்று சுப்மன் கில் நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர் : சுப்மன் கில் அற்புதமான வீரர் தான் என்றாலும் தற்போதைக்கு அவருடைய உடற்தகுதி மற்றும் பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே நாங்கள் அணியிலிருந்து அவரை நீக்கியுள்ளோம் என்றும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாடுவார் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement