இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று தரம்சாலா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.
காய்ச்சலால் வெளியேறிய இந்திய வீரர் :
இந்நிலையில் இந்த மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் இருப்பதாக அறிவித்த சூரியகுமார் யாதவ் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் விளையாட வில்லை என்று அறிவித்தார்.
அதேபோன்று அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடுவதாகவும் அறிவித்தார். இந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா தனிப்பட்ட காரணங்களால் அவரது வீட்டிற்கு திரும்பியுள்ள வேளையில் அக்சர் பட்டேல் ஏன் விளையாடவில்லை? என்ற காரணம் தான் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அக்சர் பட்டேல் இன்றைய போட்டியில் உடல் நலம் சரியில்லாததால் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையான காரணம் இல்லை என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் போது 21 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதன் காரணமாகவே அவரை அணியிலிருந்து வெளியேற்றிய வேளையில் அதை காரணம் காட்டாமல் அவர் காய்ச்சலால் தான் விளையாடவில்லை என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் சப்பைக்கட்டு கட்டியுள்ளதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் – டாஸிற்கு பிறகு பேசிய சூரியகுமார் யாதவ்
இந்த 3 ஆவது போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியானது தற்போது விளையாடி வருகிறது.



