யாருக்கும் அதை நிரூபிக்க அவசியமில்லாத விராட், ரோஹித்.. இளம் தலைமுறைக்காக தான் உழைக்கிறாங்க.. அஸ்வின்

R ashwin 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் வென்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அந்த வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினார்கள்.

குறிப்பாக 3 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 302 ரன்கள் அடித்த விராட் கோலி தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இப்படி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். தற்போது டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர்.

- Advertisement -

நிரூப்பிக்க தேவையில்லை:

இங்கிருந்து 2027 உலகக்கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெறுவதே அவர்களது திட்டமாகும். ஆனால் அதற்கு முன் அவர்களை கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கழற்றி விட முயற்சித்து வருகிறார்கள். அதற்காக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற பின்பும் ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கி வருகிறது.

இருப்பினும் அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்று தன்னுடைய தரத்தைக் நிரூபித்து பதிலடி கொடுத்தார். அதே போல தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் தொடர்நாயகன் விருது வென்று விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் விராட், ரோஹித் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

அதே சமயம் கிரிக்கெட்டை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்பதை இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக காண்பிப்பதற்காகவே அவர்கள் தங்களை நிரூபிக்க முயற்சிப்பதாகவும் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் தன்னுடைய ஃபிட்னஸில் வேலை செய்து கம்பேக் கொடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள். அதே போல விராட் கோலி பேட்டிங்கில் அசத்துவது அவர்கள் போடும் உழைப்பைக் காட்டுகிறது”

இதையும் படிங்க: இன்னும் 3 வருஷம் விளையாடுனா போதும்.. நிச்சயமா விராட் கோலியால் அதை சாதிக்க முடியும் – கவாஸ்கர் கருத்து

“அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய நிலைமை இருப்பது நகைப்புக்குரியது. அவர்கள் எதை நிரூபிக்க வேண்டும்? இவை அனைத்துமே செய்தியாகும். நீங்கள் நீண்ட காலம் விளையாடும் போது மேடு பள்ளங்கள் வரும். அவர்கள் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. ஆனால் அது வருங்கால தலைமுறைக்கு, நீங்கள் நீண்ட காலம் விளையாட வேண்டுமெனில் சிலவற்றை தியாகம் செய்து நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டைக் காண்பிக்கும் செயலாகும். ஏனெனில் இந்த விளையாட்டில் யாரும் பெரியவர் கிடையாது” என்று கூறினார்.

Advertisement