தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் கடந்த வாரம் நடந்த டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து தோல்வியைப் பரிசளித்த தென்னாப்பிரிக்க அணிக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அந்த வெற்றிக்கு விராட் கோலி தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.
பொதுவாகவே விராட் கோலி ஆரம்பத்தில் நங்கூரமாக விளையாடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டவர். ஆனால் இத்தொடரில் மிகவும் அதிரடியாக விளையாடிய அவர் 135, 102, 65* என 302 ரன்களை 117 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசத்தினார். அதிலும் 3வது போட்டியில் அவருடைய மிரட்டலான ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் 2016இல் இருந்த விராட் கோலி திரும்பியுள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சச்சினின் சாதனை:
முன்னதாக 2017 காலகட்டங்களில் அசால்டாக சதங்களை அடித்து வந்த விராட் கோலி எளிதாக சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் உலக சாதனையை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2019 – 2021 வரை ஃபார்மை இழந்து தடுமாறிய அவர் 2022இல் மீண்டும் சதமடிக்க துவங்கினார். இருப்பினும் தற்போது டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்.
தற்போது வரை 84 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெற திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கு முன் இந்தியா குறைவான ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. எனவே அந்த குறைவான போட்டிகளில் அவர் மேற்கொண்டு 17 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது.
கவாஸ்கர் நம்பிக்கை:
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் டி20 போல விளையாடும் அரிதான விராட் கோலி மீண்டும் திரும்பியுள்ளதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே சச்சினின் சாதனையை அவர் உடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஏன் முடியாது? இன்னும் 3 வருடங்கள் விளையாடினாலும் அவருக்கு 16 சதங்கள் தேவைப்படுகிறது”
இதையும் படிங்க: ஒன்டேவில் டி20 ஃமோடில் மிரட்டும் விராட் கோலி.. சச்சினின் அந்த உலக சாதனை உடைக்க வாய்ப்பிருக்கு.. கவாஸ்கர்
“இத்தொடரில் 3 போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ள அவர் விளையாடும் விதத்திற்கு அடுத்த நியூசிலாந்து தொடரில் 2 அடித்தால் 87 சதங்களைத் தொடுவார். எனவே 100 சதங்களைத் தொடுவதற்கான வாய்ப்பு அவருக்கு நன்றாகவே இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நல்ல அடித்தளம் அமைத்ததால் வெற்றி இந்தியாவின் பாக்கெட்டில் இருப்பதை உணர்ந்த அவர் தமக்குத் தாமே மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இப்படி டி20 அவதாரம் எடுப்பதைப் பார்ப்பது அரிதாகும்” என்று கூறினார்.



