இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி :
இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 270 ரன்களில் சுருண்டது. பின்னர் 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 39.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 271 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரரான விராட் கோலி 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இப்படி இவரது அசத்தலான ஆட்டம் இந்த தொடர் முழுவதுமே வெளிப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் சதம் அடித்து அசத்தியிருந்த விராட் கோலி மூன்றாவது போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் அடித்து அசத்தியதால் அவருக்கு இந்த தொடரின் தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவர் பெற்ற இந்த தொடர் நாயகன் விருதின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரை கடந்த 2 அடி முன்னே சென்றுள்ள விராட் கோலி எட்ட முடியாத சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆவது இந்திய வீரராக ஹிட்மேன் ரோஹித் சர்மா நிகழ்த்திய – மாபெரும் சாதனை
சர்வதேச போட்டிகளை பொருத்தவரை அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 20 விருதுகளுடன் இருக்கும் வேளையில் விராட் கோலி நேற்று பெற்ற தொடர் நாயகன் விருதின் மூலம் அவரை தாண்டி 22 விருதுகளுடன் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



