இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த பல ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் அவரது தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இந்திய அணிக்கு உதவியது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் அவர் விளையாடும் போது இந்திய அணி பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளது.
வாஷிங்டன் சுந்தர் நிறைய ஓவர்களை வீச வேண்டும் : ஹர்பஜன் சிங்
அந்த அளவிற்கு தனது பந்துவீச்சில் அஸ்வின் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளார். அதோடு தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை வழங்கி ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர் என்பதை டெஸ்ட் போட்டிகளில் நிரூபித்து வந்தார்.
ஆனால் அவருக்கு அடுத்து இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரால் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தாலும் பந்துவீச்சில் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்திய டெஸ்ட் அணியில் தற்போதைக்கு சிறந்த ஆப் ஸ்பின்னர் இல்லை என்ற தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் தற்போது நமது டெஸ்ட் அணியில் ஆஃப் ஸ்பின்னராக இருந்து வருகிறார். ஆனாலும் அவரால் அஸ்வின் ஏற்படுத்திய தாக்கத்தை டெஸ்ட் போட்டிகளில் ஏற்படுத்த முடியவில்லை. இந்த விடயம் தற்போதைய இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய குறையாக பார்க்கிறேன்.
ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் மிகக் குறைந்த அளவில் ஓவர்களை வீசுகிறார். ஒரு ஸ்பின்னராக அணியில் இடம்பெறும் வீரர் டெஸ்ட் போட்டியில் குறைந்தது 30 முதல் 35 ஓவர்கள் வரை வீச வேண்டும். ஆனால் வாஷிங்டன் சுந்தர் மிகக்குறைவான அளவிலேயே ஓவர்களை வீசுகிறார்.
இதையும் படிங்க : நிதீஷ் ரெட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க நிர்வாகம் தான் இந்த விடயத்தில் ஹெல்ப் பண்ணனும் – விவரம் இதோ
இந்தியா போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளங்களில் ஒரு முழுநேர சுழற்பந்து வீ0ச்சாளர் அதிக அளவிலான ஓவர்களை வீச வேண்டும். அதேபோன்று இந்தியாவில் இனிவரும் டெஸ்ட் தொடர்களில் வெறும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை மட்டும் அமைக்காமல் நல்ல கிரிக்கெட்டுக்கு உதவும் தரமான சவாலான ஆடுகளங்களை அமைக்க வேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



