தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரில் 4 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 83 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். அதுமட்டும் இன்றி 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துரத்துகையில் அவருடைய துவக்கம் சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
சச்சினின் வழியை ஜெய்ஸ்வால் பின்பற்றனும் : டேல் ஸ்டெயின்
ஆனால் முக்கியமான இந்த இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த தடுமாற்றமான ஆட்டம் பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெய்ஸ்வால் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த சச்சின் டெண்டுல்கரின் வழியை பின்பற்றி விளையாட வேண்டும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜெய்ஸ்வால் தற்போது அவசரப்பட்டு சில தவறான ஷாட்டுகளை விளையாடி ஆட்டமிழக்கிறார். வலது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவரது தடுமாற்றம் இல்லை. அவர் நேச்சுரலாகவே வலது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடுகிறார். ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஒரு தடுமாற்றம் அவரிடம்இருக்கிறது.
எனக்கு ஒரு விடயம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. சச்சின் ஒருமுறை கவர் ட்ரைவ் அடித்து தொடர்ச்சியாக ஆட்டமிழந்த வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கவர் டிரைவ் இல்லாமல் ஒரு போட்டி முழுவதும் விளையாடியிருந்தார்.
அதுபோன்று சூழலுக்கு ஏற்ற எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து ஜெய்ஸ்வால் செயல்பட வேண்டும். சச்சின் எடுத்த அதே யுக்தியை ஜெய்ஸ்வாலும் கடைபிடித்து இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அடிக்க செல்லாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்.
இதையும் படிங்க : இந்த ஈஸியான திட்டத்தை வெச்சு தான் இந்தியாவை சாய்த்தோம்.. தொடர்நாயகன் மார்கோ பேட்டி
பின்னர் தேவையான பந்துவீச்சாளர்களை அடித்து விளையாடலாம். இதுபோன்ற சில மாற்றங்களை ஜெய்ஸ்வால் செய்தால் நிச்சயம் அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியும் என டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.



