தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது ஏற்கனவே கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற முடிந்த முதலாவது போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ள வேளையில் அடுத்ததாக நவம்பர் 22-ஆம் தேதியான இன்று கௌகாத்தி மைதானத்தில் துவங்கிய இரண்டாவது போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
சுப்மன் கில் விலகல் குறித்து : ரிஷப் பண்ட் பேட்டி
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் காயம் காரணமாக கேப்டன் கில் வெளியேறியுள்ள வேளையில் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் அணியில் இணைந்துள்ளார்.
அதேபோன்று மற்றொரு மாற்றமாக அக்சர் படேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியிலிருந்து சுப்மன் கில் விலகியது குறித்தும், தான் முதல் முறையாக டெஸ்ட் கேப்டன் பதவி ஏற்றுள்ளது குறித்தும் ரிஷப் பண்ட் போட்டிக்கு முன்னர் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது மிகப் பெருமையான விடயமாக பார்க்கிறேன். எந்த ஒரு வீரருக்குமே தங்களது அணியை வழிநடத்த வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அந்த வகையில் எனது நாட்டினை நான் தலைமை தாங்கி வழிநடத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு கொடுத்த இந்த வாய்ப்பை இரண்டு கரங்களிலும் பற்றி கொண்டு என்னுடைய சிறப்பான செயல்பாட்டை இந்த போட்டியில் வெளிப்படுத்துவேன். இந்த போட்டியில் நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் விரும்பினோம். அதே வேளையில் முதலில் பந்து வீசுவதும் தவறு கிடையாது. சுப்மன் கில் மெல்ல மெல்ல படிப்படியாக தனது காயத்திலிருந்து வெளியேறி வருகிறார்.
இதையும் படிங்க : டெஸ்ட் அணியை பொறுத்தவரை இவர்தான் 3 ஆம் இடத்தில் விளையாடனும் – அஜிங்க்யா ரஹானே கருத்து
இந்த போட்டியில் அவர் விளையாட வேண்டும் என்ற விருப்பத்தில் தான் இருந்தார். அதே வேளையில் அவரது உடல் இந்த போட்டிக்கு விளையாடும் அளவிற்கு ஒத்துழைக்கவில்லை. அவர் நிச்சயம் மிக வலிமையாக மீண்டும் அணிக்கு திரும்புவார் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



