2வது டெஸ்டில் கில் விட்ட.. கடினமான கேப்டன்ஷிப் வேலையை அவர் பாத்துக்குவாரு.. பாண்டிங் நம்பிக்கை

Ricky Ponting
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான ஆடுகளம் முக்கிய காரணமானது. அது போக இந்திய கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் எடுத்திருந்த போது கழுத்து வலியால் பாதியிலேயே வெளியேறினார்.

அதனால் 2வது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்ய வராதது இந்தியாவின் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. இதற்கிடையே கழுத்து வலியிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாத கில் 2வது போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. எனவே அவருக்கு பதிலாக துணை கேப்டன் ரிஷப் பண்ட் 2வது போட்டியில் இந்திய அணியைத் தலைமைத் தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடினமான வேலை:

இந்நிலையில் கொல்கத்தாவில் சந்தித்த படுதோல்விக்குப் பின் திடீரென இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவது மிகவும் கடினமான வேலை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த வேலையை ரிஷப் பண்ட் நன்றாக செய்வார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில் விக்கெட் கீப்பராக இருக்கும் பண்ட் ஐபிஎல் தொடரில் கேப்டனாக விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சில தினங்களுக்கு முன்பாக ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்த அணியில் மற்றொருவர் வந்து கேப்டனுடைய இடத்தை நிரப்புவது எளிது கிடையாது. ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைக் கொண்ட வீரர். விக்கெட் கீப்பராக விளையாடுவது அவருக்கு எப்படி இந்த ஆட்டம் பரிணமிக்கிறது என்பதையும், ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க உதவும்”

- Advertisement -

பாண்டிங் நம்பிக்கை:

“அதை அவர் கடந்த சில ஐபிஎல் தொடர்களில் செய்து வருகிறார். அதற்கு முன்பாக டெல்லி ஐபிஎல் அணிக்காக அவர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். எனவே இந்த வேலை அவருக்கு சரியானதாக இருக்கும். அதே சமயம் அவர் கேப்டனாக எப்படி விளையாடுகிறார், பேட்ஸ்மேனாக எந்த ஸ்டைலைக் கடைபிடிக்கிறார் என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். இந்த சூழ்நிலையை அவர் சரியாக கையாள்வார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை – என்ன காரணம்?

இது மட்டுமின்றி சமீபத்தில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணியை ரிஷப் பண்ட் கேப்டனாக தலைமைத் தாங்கினார். எனவே 2வது போட்டியில் அவர் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவார் என்று நம்மலாம். அப்போட்டி நவம்பர் 22ஆம் கௌகாத்தியில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement