15 ஓவர்கள் முன்கூட்டியே முடிவுக்கு வந்த முதல் நாள் ஆட்டம்.. வலுவான நிலையில் இந்தியா – விவரம் இதோ

IND vs RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது நவம்பர் 14-ஆம் தேதியான இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

முன்கூட்டியே முடிவுக்கு வந்த முதல் நாள் ஆட்டம் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்களையும், வியான் முல்டர் 24 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர். அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 37 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 13 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. அதாவது தென்னாப்பிரிக்க அணி 55 ஓவர்கள் விளையாடிய வேளையில் இந்திய அணி 20 ஓவர்களை மட்டுமே விளையாடியது.

- Advertisement -

பொதுவாக டெஸ்ட் போட்டியில் குறைந்தது ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீசப்படும் வேளையில் இந்த போட்டியின் முதல் நாளில் 75 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முன்கூட்டியே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு காரணம் யாதெனில் : இந்திய நேரப்படி சரியாக 4:30 மணிக்கு போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முன்கூட்டியே முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அம்பயர்கள் அறிவித்ததால் இந்த முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : 2023இல் ஷமி வேணும்ன்னு பிச்சை கேட்டேன்.. இப்போ இந்தியா மாதிரி அவங்களும் கழற்றி விட்டாங்க.. டேல் ஸ்டைன்

தற்போது வரை இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 37 ரன்கள் அடித்திருக்கும் வேளையில் இன்னும் 122 ரன்கள் மட்டுமே பின்னிலையில் இருப்பதினால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. நாளை நிச்சயம் ஒரு 450 ரன்கள் வரை இந்திய அணி அடிக்கும் பட்சத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement