பும்ராவை விட மதிப்புள்ள நம்பர் 1 பவுலரான.. அவர் 2026 டி20 உ.கோ இந்தியா ஜெய்க்க ஹெல்ப் பண்ணுவாரு.. பத்ரிநாத்

Subramaniam Badrinath
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. அதையும் சேர்த்து சூரியகுமார் யாதவ் தலைமையில் இதுவரை விளையாடிய அனைத்து டி20 தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வென்ற இந்தியா 2025 ஆசியக் கோப்பையையும் வென்று சாதனை படைத்தது.

அதனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணி என்பதை இந்தியா தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அதன் காரணமாக அடுத்த வருடம் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா சொந்த மண்ணில் வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளது. கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது.

- Advertisement -

பும்ராவை விட பெஸ்ட்:

அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் 15 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் வென்று முக்கிய பங்காற்றினார். எனவே 2026இல் சொந்த மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் மீண்டும் கருப்பு குதிரையாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய இந்திய அணியில் தம்மைப் பொறுத்த வரை பும்ராவை விட வருண் சக்கரவர்த்தி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பர் ஒன் பவுலர் என்று முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

எனவே 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வருண் முக்கிய பங்காற்றுவார் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி பத்ரிநாத் பேசியது பின்வருமாறு. “வருண் சக்கரவர்த்தி உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக இருக்கிறார் என்பதை நமக்கு புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சொல்லப்போனால் பும்ராவை விட அவர் அதிக மதிப்புள்ளவராக இருக்கிறார்”

- Advertisement -

பத்ரிநாத் கருத்து:

“பவர்பிளே அல்லது மிடில் அல்லது டெத் ஓவர்கள் உட்பட ரன்கள் அதிகமாக போகும் நேரங்களில் வருண் உங்களுக்கு சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு உதவக்கூடிய பவுலராக இருக்கிறார். அவர் தன்னுடைய ஆட்டத்தில் வித்தியாசமான லெவலை தொட்டுள்ளார். சுமாரான ஃபிட்னஸ் காரணமாக கழற்றி விடப்பட்ட அவர் தற்போது சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளார்”

இதையும் படிங்க: 2026 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக ஆர்.சி.பி அணியின் கேப்டனுக்கு நேர்ந்த சோகம் – விவரம் இதோ

“கம்பேக் கொடுத்தது முதல் கேரியரின் 2வது இன்னிங்ஸில் அவர் தனது ஆட்டத்தை வித்தியாசமான லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். டி20 உலகக் கோப்பையை முன்னிட்டுச் செல்லும் போது இந்திய அணிக்கு அவர் சொத்தாகவும் முக்கியமானவராகவும் இருப்பார். வருணுக்கு நல்ல நாள் அமைந்தால் இந்தியாவுக்கும் நல்ல நாள் அமையும்” என்று தெரிவித்தார். இங்கே ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் வருண் ஆஸ்திரேலிய தொடரில் 3 விக்கெட்டுகளை 6.83 என்ற எக்கனாமியில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement