100 விக்கெட்ஸ் எடுத்த அர்ஷ்தீப்பை.. இந்த காரணத்தால் தான் பெஞ்சில் விடுறோம்.. திட்டம் பற்றி மோர்கெல் பேட்டி

Arshdeep Singh 255
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் நான்காவது போட்டி நவம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெற இரு அணிகளும் தயாராக இருக்கின்றன.

முன்னதாக அத்தொடரில் இந்தியாவுக்காக 100 டி20 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங் முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை. இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் இடது கை பவுலர் என்ற தனித்தன்மையை கொண்டுள்ளார். இருப்பினும் பேட்டிங்கில் ஆழம் வேண்டும் என்பதற்காக அவரை அடிக்கடி பெஞ்சில் அமர வைக்கும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தமக்குப் பிடித்த ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

- Advertisement -

100 விக்கெட்ஸ் எடுத்தும்:

அதற்கு ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சூழ்நிலையில் 3வது போட்டியில் வாய்ப்பு பெற்ற அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் கௌதம் கம்பீருக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் தம்மை சாம்பியன் பிளேயர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இருப்பினும் அடுத்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்புள்ள குறைந்தபட்ச போட்டிகளில் நிறைய வீரர்களுக்கு வாய்ப்புளித்து திறமையானவர்களை கண்டறிவதற்காகவே அவ்வப்போது அர்ஷ்தீப் பெஞ்சில் அமர்வதாக பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார். அந்த முடிவின் பின்னணியில் இருக்கும் இந்திய அணியின் திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

திட்டம் பற்றி விளக்கம்:

“அது எளிதான முடிவல்ல. எப்போதும் வீரர்கள் தேர்வு சம்பந்தமாக ஏமாற்றம் இருக்கும். ஆனால் ஒரு வீரராக சில நேரங்களில் அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. எங்களைப் பொறுத்த வரை வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாட கடினமாக உழைத்து தயாராக இருக்குமாறு ஒவ்வொரு வீரரையும் தொடர்ந்து கேட்டுக் கொள்கிறோம். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் குறைந்த போட்டிகளே இருக்கின்றன”

இதையும் படிங்க: கருண் நாயரின் கரியரையும் முடித்துவைத்த அஜித் அகார்கர்.. இனி சேன்ஸ் கிடைப்பது கஷ்டம் தான் – விவரம் இதோ

“அதற்கு முன் அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி எங்களுடைய வீரர்கள் ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது எங்களுக்கு முக்கியம். இல்லையெனில் அவர்களுடைய திறமை பற்றி எங்களுக்கு தெரியாமல் போய்விடும். மாற்றங்கள் நிகழ்த்தினாலும் நாங்கள் போட்டியை வெல்ல வேண்டும் என்ற மனநிலையுடன் எப்போதும் விளையாடுகிறோம்” என்று கூறினார்

Advertisement