ப்ளீஸ் அர்ஷ்தீப்பை ஆடவைங்க.. அதை செய்யனும்ன்னா பும்ராவை பெஞ்சில் உட்கார வைங்க.. அஸ்வின் விளாசல்

R Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த 2 போட்டிகளிலும் இந்தியாவுக்காக 100 டி20 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக சாதனையைப் படைத்த அர்ஷ்தீப் சிங் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

குறிப்பாக 8வது இடத்தில் விளையாடக்கூடியவர் பேட்டிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விரும்புகிறார். அந்த ஒரே காரணத்துக்காக அவரை கழற்றி விட்டுள்ள கௌதம் கம்பீர் தமக்கு பிடித்த ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார். அந்த வாய்ப்பில் 2வது போட்டியில் ராணா 33 ரன்கள் அடித்தது எந்த விதத்திலும் இந்தியாவின் வெற்றிக்கு உதவவில்லை.

- Advertisement -

அஸ்வின் விளாசல்:

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்குப் பின் 100 விக்கெட்டுகளை எடுத்த அர்ஷ்தீப் 2வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவதற்கு 100% தகுதியானவர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஒருவேளை சோதனைகளை செய்ய விரும்பினால் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். மற்றபடி அர்ஷ்தீப் சிங் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று அஸ்வின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் சோதிக்க விரும்பினால் பும்ராவுக்கு ஓய்வளியுங்கள். ஏனெனில் அவருடைய பணிச்சுமை ஏற்கனவே ஒரு பிரச்சினையாக இருக்கிறது. எனவே பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கலாம். அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக அதிகம் விக்கெட்டுகள் எடுத்தவர். 2026 டி20 உலகக் கோப்பை நடைபெறும் இந்தியாவில் பனி இருக்கும்”

- Advertisement -

ப்ளீஸ் வாய்ப்பு கொடுங்க:

“இருந்தும் அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை என்பது சோகமானது. ஏனெனில் அவர் தன்னுடைய வாய்ப்புக்கு தகுதியானவர். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ராவுக்கு அடுத்தபடியாக அவருடைய பெயர் 2வது இடத்தில் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. பும்ரா விளையாடவில்லையெனில் அர்ஷ்தீப் உங்களுடைய முதல் தேர்வாக இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: இந்திய அணி இனிமேல் கவலைப்பட வேண்டாம்.. கடைசி 3 மேட்ச்ல ஆடமாட்டேன்.. காரணத்தை சொன்ன ஹேசல்வுட்

“ராணா ஓரளவு பேட்டிங்கில் அசத்துகிறார் என்றாலும் பிரச்சினை அதுவல்ல. 2024 டி20 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய பின்பும் அர்ஷ்தீப் தொடர்ச்சியாக பெஞ்சில் அமர வைக்கப்படுகிறார். இப்படி செய்தால் அவர் ஃபார்மை இழந்து விடுவார். ஆசியக் கோப்பையில் இப்படி செய்த காரணத்தால் அவர் ஆரம்பத்தில் தடுமாறினார். அப்படி உங்களுடைய சாம்பியன் பவுலர் தடுமாறுவது சரியல்ல. அவருக்கு தகுதியான இடத்தைக் கொடுங்கள் ப்ளீஸ்” என்று கூறினார்.

Advertisement