இந்திய அணி மகளிர் உ.கோ ஜெய்ச்சா.. ஜெமிமாவுடன் சேர்ந்து நான் பாடுவேன்.. கவாஸ்கர் மகிழ்ச்சி அறிவிப்பு

Sunil Gavaskar
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 7 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வெளியேறிய இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நவிமும்பையில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 339 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய இந்தியா 48.3 ஓவரில் 341/5 ரன்களை வெற்றி பெற்றது. அதனால் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டியில் 300+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. அந்த வெற்றிக்கு ஜெமிமா ரோட்ரிகஸ் 129*, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 89 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்கள்.

- Advertisement -

பாட்டு பாடுவோம்:

குறிப்பாக ஆரம்பக்கட்ட போட்டிகளில் டக் அவுட்டானதால் கழற்றி விடப்பட்ட ஜெமிமா கடைசிக்கட்ட போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்பில் செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த அவர் இந்தியாவுக்கு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இதை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு கோப்பையை வெல்ல இந்தியா தயாராகி வருகிறது.

முன்னதாக கிட்டார் இசைக்கருவியை வாசிப்பது ஜெமிமாவுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் நிறைய போட்டிகளில் அரை சதமடித்த போது அவர் பேட்டை வைத்து கிட்டார் வாசிப்பது போல் கொண்டாடியுள்ளார். எனவே இம்முறை இந்தியா உலகக் கோப்பையை வென்றால் அவருடன் இணைந்து தாம் கிட்டார் வாசித்து பாட்டு பாட உள்ளதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசுவது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் அறிவிப்பு:

“ஒருவேளை இந்தியா உலகக் கோப்பையை வென்றால், ஜெமிமாவுக்கு சம்மதம் என்றால் நானும் அவரும் ஒன்றாக பாடுவோம். அவர் கிட்டார் வாசிக்கட்டும் நான் பாடுவேன். சில வருடங்களுக்கு முன் அதை நாங்கள் ஏற்கனவே பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் செய்துள்ளோம். அங்கே ஒரு இசைக்குழு வாசித்துக் கொண்டிருந்த போது அதை நாங்கள் செய்ய முடிவெடுத்தோம்”

இதையும் படிங்க: ரூதர்போர்ட் ஹாட்ரிக் சாதனை.. 3 – 0 என வங்கதேசத்தை ஒய்ட்வாஷ் செய்த வெ.இ வரலாற்று வெற்றி

“எனவே இந்தியா வென்ற பின் அதை அவர் இந்த வயதான மனிதருடன் மீண்டும் செய்ய மகிழ்ச்சியாக இருந்தால் நானும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். மேலும் பிக்பாஷ், ஹண்ட்ரட் போன்ற வெளிநாட்டு தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்ட ஜெமிமாவுக்கு எப்படி பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பது தெரியும் என்றும் கவாஸ்கர் பாராட்டினார். அத்துடன் ஜெமிமா செய்த 2 ரன் அவுட் ஆஸ்திரேலியாவை 350க்குள் சுருட்ட முக்கிய பங்காற்றி இந்தியாவை வெற்றி பெற வைத்ததாகவும் கவாஸ்கர் பாராட்டியது குறிப்பிடப்பட்டது.

Advertisement