ஆஸ்திரேலிய எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியாவை 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. எனவே டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக இருக்கிறது.
அக்டோபர் 29ஆம் தேதி கான்பெரா நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 9.4 ஓவரில் 97/1 ரன்கள் நன்றாகத் துவங்கியும் மழை வந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. எனவே 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்திய அணி தயாராக இருக்கிறது.
மெல்போர்னில் மழை:
அதற்கு பதிலடி கொடுத்து சொந்த மண்ணில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற ஆஸ்திரேலியாவும் தயாராக இருக்கிறது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது போட்டி அக்டோபர் 31ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்குத் துவங்குகிறது. ஆனால் முதல் போட்டியை போலவே 2வது போட்டியிலும் மழை வந்து விளையாடுவதற்கு தயாராக இருக்கிறது.
ஆம் மெல்போர்ன் நகரில் அக்டோபர் 31ஆம் தேதி சராசரியாக 40% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக 2வது போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணிக்கு துவங்குகிறது. அப்போது சராசரியாக 30% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடக்குமா:
அதனால் 2வது போட்டி துவங்குவதில் காலதாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 8 மணிக்கு 20 சதவீதமாக குறையும் மழையின் அளவு இரவு 9 மணிக்கு 5% சதவீதமாக குறைகிறது. 9 மணிக்கு மேல் மழை பெய்வதற்கு வாய்ப்பு குறைந்து விடுகிறது. எனவே 2வது போட்டியில் குறைந்தது 30 – 60 நிமிடங்கள் நேரம் மழையின் குறுக்கீடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தாண்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு வெற்றியாளர் கிடைக்கும் அளவுக்கு போட்டி நடைபெறும் என்று நம்பலாம்.
இதையும் படிங்க: 12.1 சிக்ஸர்ஸ்.. வேகம் கம்மியா இருக்கு.. ஆஸி தொடரில் இந்தியா ஜெய்க்கிறது கஷ்டம் தான்.. ஏபிடி பேட்டி
இதற்கிடையே முதல் போட்டியில் 30% மட்டுமே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடைசியில் பார்த்தால் அப்போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதே போல இப்போட்டியும் மழையால் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இயற்கையை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. இருப்பினும் 2வது போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு வெற்றியாளர் கிடைக்கும் அளவுக்கு நடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.



