அஷ்வினின் பிறந்தநாளான இன்று அவர் செய்த மிகச்சிறந்த சாதனை பற்றி தெரியுமா ?- விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அணிக்காக இதுவரை 65 டெஸ்ட் மற்றும் 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ashwin india

- Advertisement -

இன்று பிறந்தநாள் காணும் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் படைத்த சாதனை குறித்த பதிவு தான் தற்போது நாம் காண உள்ளோம். அதன்படி இதுவரை ரவிச்சந்திரன் அஸ்வின் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 342 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் இந்திய அணி சார்பாக பந்து வீச்சாளர்களின் டெஸ்ட் போட்டியில் மிக விரைவாக 50, 100, 150, 200 மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அஷ்வினின் இந்த பிறந்தநாளை சிறப்பு செய்யும் விதத்தில் பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது வீடியோவினை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Advertisement