ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 29ஆம் தேதி துவங்கியது. அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறது. இருப்பினும் வலுவான ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக விளையாடாத சூரியகுமார் டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடினார்.
மோசமான ஃபார்மில் கேப்டன்:
எப்படி போட்டாலும் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கிய அவர் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பலராலும் பாராட்டப்பட்டார். அந்த வகையில் இந்தியாவின் பங்காற்றிய சூரியகுமார் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறி சாதனை படைத்தார். அதனால் கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் இந்திய அணி நல்ல வெற்றிகளைப் பெற்று வருகிறது.
ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் சூரியகுமார் பேட்டிங்கில் ரன்கள் அடிக்கத் தடுமாறி வருகிறார். குறிப்பாக 2025ஆம் ஆண்டு இதுவரை அவர் 11 போட்டிகளில் வெறும் 100 ரன்களை 9 என்ற மோசமான சராசரியை எடுத்துள்ளார். அப்படி ஆஸ்திரேலியா தொடரில் கேப்டன் சூரியகுமாரின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக இருக்கிறது.
உழைச்சுகிட்டு தான் இருக்கேன்:
இந்நிலையில் கேப்டன்ஷிப் பதவிக்கு வந்த பின்பும் தாம் கடினமாக உழைப்பதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் தம்முடைய பேட்டில் இருந்து ரன்கள் வரும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய சொந்த ஃபார்மை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக வந்த பின்பும் நான் கடினமாக உழைப்பதாகவே கருதுகிறேன். அதற்கு முன்பும் நான் உழைத்தேன்”
இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ரா மாதிரி ஒரு கில்லாடி பவுலர் இந்திய அணியில் இதுவரை இருந்தது கிடையாது – பாராட்டிய பதான்
“எனவே கேப்டனாக வந்த பின் நான் உழைக்கவில்லை என்று அர்த்தமல்ல. இத்தொடருக்கு முன் வீட்டில் நான் சில நல்ல பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன். ஆஸ்திரேலியா வந்த பின் 2 – 3 பயிற்சி அமர்வுகளை செய்தேன். எனவே நான் நல்ல இடைவெளியில் இருப்பதாக கருதுவது மிகவும் முக்கியம். ரன்கள் தாமாக வரும். ஆனால் ஒரு அணியாக சேர்ந்து கடினமாக உழைப்பது எங்களுடைய இலக்கு. அதுவே மிகவும் முக்கியம்” என்று கூறினார்



