இவர் மட்டும் ரன் அடிக்க ஆரம்பிச்சா.. எதிர் டீம் காலி ஆயிடும்.. அபிஷேக் சர்மா இல்ல – பார்த்திவ் பட்டேல் பேட்டி

Parthiv
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் 29-ஆம் தேதி கான்பெர்ரா நகரில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியகுமார் யாதவ் பார்முக்கு வருவது அவசியம் : பார்த்திவ் பட்டேல்

கடந்த ஓராண்டாகவே இந்திய டி20 அணியானது தொடர் வெற்றிகளை பெற்று வரும் வேளையில் ஆஸ்திரேலிய மண்ணிலும் அவர்களை வீழ்த்தி இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க வேண்டும் என்று இந்திய ரசிகர்களும் இந்த தொடரை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் இந்த ஆஸ்திரேலிய தொடரில் சூரியகுமார் யாதவ் ரன்களை அடிக்க துவங்கினால் எதிரணியை அடித்து நொறுக்கி விடுவார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக மட்டும் கூறவில்லை. பொதுவாகவே நான் கூறுவது யாதெனில் : சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் தனது பார்மை மீட்டெடுக்க வேண்டும். ஏனெனில் இந்திய அணி தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

- Advertisement -

ஒரு அணியின் கேப்டனாக அவரும் ரன் அடித்தால் இந்திய அணிக்கு மேலும் பலத்தை தரும். ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் போட்டியின் துவக்க ஓவர்களிலேயே ரன் குவிக்க ஆரம்பித்து விட்டால் நிச்சயம் பின் வரிசையிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் அதிரடியாக துவங்கினால் பின்வரிசையிலும் ரன்கள் வரும்,

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித்தை முந்தி சூர்யகுமாரின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் – திலக் வர்மா

இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் மட்டும் ரன்களை வழக்கம்போல் அடிக்க ஆரம்பித்து விட்டால் எதிரணியை சிதைத்து விடுவார். அந்த அளவிற்கு அவரிடம் ரன் குவிக்கும் வேகம் உள்ளதாக பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement