நேரலையில் அழுத ஆஸி வர்ணனையாளர்.. இனிமேல் விராட், ரோஹித்தை பார்க்க முடியாது.. உருக்கமான வர்ணனை

Aus Commentator
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா 7 மாதங்களுக்குப் பின் இந்தியாவுக்காக விளையாடியது பலரிடமும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர்கள் இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர்.

கடைசியாக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியா வெல்ல அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக செமி ஃபைனலில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரோகித் சர்மா கேப்டனாக இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விடை பெற்ற நாயகர்கள்:

அப்போது 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் 2027இல் 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியாது என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே ரோஹித்தை கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்க துவங்கியுள்ளது. அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் தொடரிலேயே இந்தியா தோற்றது.

இருப்பினும் கடைசிப் போட்டியில் விராட் கோலி 74*, ரோஹித் சர்மா 121* ரன்கள் அடித்து இந்தியாவை ஒயிட்வாஷ் அவமானத் தோல்வியிலிருந்து காப்பாற்றி ஆறுதல் வெற்றி பெற வைத்தனர். அத்துடன் இனிமேல் அவர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கு அதிகம் வாய்ப்பில்லை. அதனால் தங்களுக்கு ஆதரவளித்த ஆஸ்திரேலிய அவர்கள் மனதார நன்றியும் தெரிவித்தனர்.

- Advertisement -

அழுத ஆஸி வர்ணனையாளர்:

இந்நிலையில் சிட்னி போட்டியில் விராட், ரோஹித் ஆட்டத்தை ஃபினிஷிங் செய்த போது ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சியின் வர்ணனையாளர் உணர்ச்சி பொங்க அழுத வீடியோ வைரலாகி வருகிறது. இது பற்றி ஒரு வர்ணனையாளர் பேசியது பின்வருமாறு. “இது ஆஸ்திரேலியாவில் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் கடைசி இரவு. அந்த கடைசி இரவில் மிக் ஜாக்கர், கெய்த் ரிச்சர்ட்ஸ் (இசை அமைப்பாளர்கள்) ஆகியோர் கூட சிறப்பாக விளையாடியதில்லை”

இதையும் படிங்க: இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் எங்களுடைய டி20 அணி அசத்தலாக விளையாடும்.. காரணத்தை கூறிய – சூரியகுமார் யாதவ்

“கோலி, ரோஹித். இது அவர்களுடைய இரவு. ரோஹித் 121* நாட் அவுட். கோலி 74* நாட் அவுட். இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி” என்று வர்ணித்தார். அதை அருகில் நின்று கொண்டு கேட்ட மற்றொரு வர்ணனையாளர் இனிமேல் ஆஸ்திரேலியாவில் விராட், ரோஹித்தை நேரடியாக விளையாடுவதை பார்க்க மாட்டோம் என்பதை நினைத்து தம்மையே கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கி அழுதார்.

Advertisement