ஒன்டேவில் விளையாடும் போது.. டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 மாதம் ஓய்வை அறிவித்தது ஏன்? ஸ்ரேயாஸ் விளக்கம்

Shreyas Iyer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் 2023 உலகக் கோப்பையில் 500+ ரன்கள் அடித்து அசத்தினார். அதற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி தனது முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக பலவீனத்தைக் கொண்டிருந்தார். இதற்கிடையே 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயத்தைச் சந்தித்து விரைவிலேயே குணமடைந்த அவரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.

ஆனால் அதை செய்யத் தவறுவதால் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் ஆகியோரை பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது. அதனால் மீண்டும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அவருக்கு 2025 இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் அசத்தியதால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் அதிக ரன்கள் அடித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

திடீரென விலகல்:

மேலும் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா கேப்டனாக வென்ற அவரது தலைமையில் 2025 சீசனில் பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு சென்று அசத்தியது. அப்படி கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்தியா ஏ அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட அவர் 2வது போட்டியில் விலகுவதாக அறிவித்தார்.

அத்துடன் முதுகுப் பகுதியில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் தற்காலிகமாக 6 மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்தார். அதனால் இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுப்பதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர் தவற விட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில் அதற்கான காரணம் பற்றி ஸ்ரேயாஸ் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

விளக்கிய ஸ்ரேயாஸ்:

“ஐபிஎல் தொடருக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய போது நீண்ட நேரம் ஃபீல்டிங் செய்தால் என்னுடைய தீவிரத்தன்மை குறைவதை உணர்ந்தேன். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் உங்களுடைய தீவிரத்ன்மையைப் பராமரிக்க வேண்டும். என்னால் அதைச் செய்ய முடியவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு நாளுக்குப் பின் உங்களுக்கு புத்துணர்ச்சியடைய இடைவெளி கிடைக்கும்”

இதையும் படிங்க: தலைக்கு மேல் தொங்கும் அந்த கதிக்காக பயப்படாம.. ரன்ஸ் அடிக்க விராட் இதை செய்யனும்.. பதான் அட்வைஸ்

“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த வாய்ப்பு கிடைக்காது என்பதால் இந்த முடிவை எடுத்து என்னுடைய செய்தியைத் தெரிவித்தேன். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத சமயத்தில் என்னுடைய டெக்னிக்கில் மாற்றங்களை செய்தேன். அதை உடனடியாக செய்யவில்லை. நீங்கள் பவுன்ஸை அதிகம் எதிர்பார்க்கக்கூடிய பிட்ச்களில் கொஞ்சம் உள்ளே நிற்க வேண்டும். தற்போது அந்த சூழ்நிலைகளில் விளையாடுவதற்கு வளர்ந்துள்ளேன்” என்று கூறினார்.

Advertisement