இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணி அடைந்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதீஷ் ரெட்டி நிகழ்த்திய சாதனை :
இதன் காரணமாக இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கும் வேளையில் இரண்டாவது ஒருநாள் போட்டியானது அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பெர்த் போட்டியின் போது இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய இளம் வீரர் நிதீஷ் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரராக ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இந்திய அணிக்காக மூன்று விதமான வடிவத்திலும் விளையாடிய முதல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீரர் என்ற சாதனையை நிதீஷ் குமார் ரெட்டி நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக வேணுகோபால் ராவ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர்.
இருந்தாலும் மூன்று வடிவ இந்திய அணிக்காகவும் விளையாடிய ஆந்திர வீரர் என்ற சாதனையை நிதிஷ் குமார் ரெட்டி நிகழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் கடந்த ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அறிமுகமானார்.
இதையும் படிங்க : அடுத்த போட்டியில் இந்த தப்பை பண்ணாதீங்க கில்.. கே.எல் ராகுல் விடயத்தில் இதுதான் சரி – விவரம் இதோ
அதேபோன்று தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அவர் அறிமுகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 22 வயதான நிதீஷ் ரெட்டி இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 1 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



