முதல் போட்டியில் மிஸ் ஆகிடுச்சு.. ஆனா இரண்டாவது போட்டியில் மிஸ் ஆகாது.. ரோஹித், கோலிக்கு – கவாஸ்கர் ஆதரவு

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக ரோகித் சர்மா 8 ரன்கள் அடித்த வேளையில் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறி இருந்தார்.

அடுத்த போட்டியில் 2 பேருமே அசத்துவாங்க : சுனில் கவாஸ்கர்

எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடரில் அவர்கள் விளையாட வேண்டும் என்றால் இந்த ஆஸ்திரேலியா தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற கட்டாயத்துடன் விளையாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியிலேயே அவர்கள் இருவரும் சறுக்களை சந்தித்தது பலரது மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் முதல் போட்டியில் அவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தாலும் இரண்டாவது போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவித்தால் ஆச்சரியப்பட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பெர்த் மைதானத்தில் பவுன்ஸ் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரே பெர்த் மைதானத்தில் கடும் சவால்களை சந்தித்தனர். அதனால் ஒரு சில மாதங்கள் விளையாடாமல் களத்திற்கு மீண்டும் வந்துள்ள அவர்கள் இருவரும் தடுமாறியதில் எந்த தவறும் இல்லை.

- Advertisement -

ஆனால் அடுத்த இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அவர்கள் அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டு போட்டியின் ஆரம்பத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு பிறகு ரன் குவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அடுத்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என இருவருமே பெரிய ரன்கள் அடித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதையும் படிங்க : சாம்பியன்களை முடிஞ்சதா எழுதாதீங்க.. இதை செஞ்சு விராட், ரோஹித் 2027 உ.கோ வருவாங்க.. பாண்டிங் பேட்டி

நிச்சயம் அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த போட்டியில் 300 ரன்கள் கடக்கும் என்றும் சுனில் காஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மறுதினம் அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement