ஃபிளைட்டில் இல்லாத ஷமி சொல்றது உண்மையல்ல பொய்.. 6 மாதத்தில் மாறினால் கதை மாறும்.. அகர்கர் பதிலடி

Ajit Agarkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடினார். அத்தொடரில் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அடுத்ததாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் முழுமையாக குணமடையாத காரணத்தால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை.

அதன் பின் குணமடைந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய ஷமி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா வெற்றி பெற தம்முடைய பங்காற்றினார். அதனால் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை முழுமையாக ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டது. அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கழற்றி விடப்பட்ட அவருக்கு அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஷமி சொல்வது உண்மையல்ல:

அதனால் விரக்தியடைந்த முகமது ஷமி தாம் முழுமையாக ஃபிட்டாகி ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். அப்படி ரஞ்சிக் கோப்பையில் விளையாட தகுதியாக இருக்கும் தம்மால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட ஃபிட்டாக இருக்க முடியாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் ஃபிட்டாக இருக்கிறேன் என்று ஷமி சொல்வது உண்மையல்ல பொய் என்று அகர்கர் தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் ஃபிட்டானால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் அகர்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி இந்தியாவுக்காக அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய வீரர். ஒருவேளை அவர் ஏதாவது சொல்லியிருந்தால் அதைப் பற்றி நான் அவரிடம் பேசுவேன். அல்லது அவர் என்னிடம் பேசுவார்”

- Advertisement -

அகர்கர் மறுப்பு:

“ஒருவேளை அவர் ஃபிட்டாக இருந்திருந்தால் இந்நேரம் விமானத்தில் இருந்திருப்பார். துரதிஷ்டவசமாக அவர் ஃபிட்டாக இல்லை. தற்போது உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பையின் முதல் ரவுண்ட் துவங்கி நடைபெறுகிறது. அதில் சில போட்டிகளில் விளையாடிய பின் அவர் போதுமானளவு ஃபிட்டாக இருக்கிறாரா என்பதை நாங்கள் பார்ப்போம். ஒருவேளை அவர் இங்கே இருந்திருந்தால் நான் நேரடியாக பதிலளித்திருப்பேன்”

இதையும் படிங்க: இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் 2027 வேர்ல்டுகப் சான்ஸ் உறுதி.. சிராஜிக்கு – கிடைத்திருக்கும் வாய்ப்பு

“கடந்த சில மாதங்களாக அவருடன் நான் பலமுறை பேசியுள்ளேன். இனிமேல் நன்றாக பந்து வீசினால் ஷமி போன்றவரை அணியில் தேர்ந்தெடுக்க ஏன் நீங்கள் விரும்ப மாட்டீர்கள்? ஆனால் கடந்த ஆஸ்திரேலியா தொடர் உட்பட அவரை இந்தியாவுக்காக விளையாட வைக்க நாங்கள் 6 – 8 மாதங்களாக தீவிரம் காட்டினோம். துரதஷ்டவசமாக அவர் ஃபிட்டாக இல்லை. ஒருவேளை சில மாதங்கள் ஃபிட்டாக இருந்தால் அவருடைய கதை மாறலாம். ஆனால் தற்சமயத்தில் அவர் இங்கிலாந்து தொடருக்கு கூட ஃபிட்டாக இல்லை” என்று கூறினார்.

Advertisement