இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற முடிவெடுத்துள்ளனர். அதற்கு முன் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது.
அதனாலேயே ரோஹித் சர்மாவை நீக்கியுள்ள தேர்வுக்குழு இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமித்துள்ளது. முன்னதாக கடந்த நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் விராட், ரோஹித் ஆகியோர் தடுமாற்றமாக விளையாடினர். அவர்களுடைய சுமாரான ஆட்டம் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் மனம் தளராத அவர்கள் இங்கிலாந்து தொடரில் கம்பேக் கொடுப்பதற்காக பல வருடங்கள் கழித்து ரஞ்சிக்கோப்பையில் விளையாடி தயாரானார்கள்.
விராட், ரோஹித் போகட்டும்:
அத்துடன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் தலைமையில் இந்தியா வெல்வதற்கு விராட் கோலி முக்கிய பங்காற்றினர். அதனால் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. அடுத்த வாரமே அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டது ரசிகர்களை சோகமடைய வைத்தது.
குறிப்பாக நல்ல ஃபிட்னஸை கொண்டுள்ள விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடி 10000 ரன்கள் அடிப்பதற்கு தகுதியானவர் என்று ஜாம்பவான் வீரேந்திர சேவாக் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓய்வாகி சென்றவர்களைப் பற்றி பேசி பயனில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். மாறாக கில் தலைமையிலான இளம் இந்திய அணி 2 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்ததைப் பாராட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அகர்கர் வெளிப்படை:
இது பற்றி அகர்கர் என்டிடிவியில் பேசியது பின்வருமாறு. “நான் (விராட், ரோஹித்) இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்க்கவில்லை. பொதுவாக நான் வீரர்களிடம் நேரடியாக பேசுவேன். நீங்கள் இங்கிலாந்தில் விளையாடிய அணியின் மீது கவனம் செலுத்த வேண்டும். தற்போதுள்ள வீரர்கள் மேலே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ஏன் ஓய்வு பெற்றவர்களைப் பற்றி நாம் பேச வேண்டும்?”
இதையும் படிங்க: ஜடேஜாவை தாண்டி தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய அக்சர் படேல் – என்ன சொன்னார் தெரியுமா?
“நல்ல வீரர்கள் என்றாலும் அவர்கள் இனிமேல் டெஸ்ட் அணியில் இருக்கப்போவதில்லை. சொல்லப்போனால் நீண்ட காலம் விளையாடிய சீனியர்கள் அணியை விட்டுச் செல்வது புதிதல்ல. நமக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் (சச்சின்) இனிமேலும் விளையாட மாட்டார். அப்படி மாற்றங்கள் நடப்பது இயற்கையாகும். அணியின் நலனுக்காக பொறுப்பான முடிவுகளை எடுப்பதே எங்களது வேலை. அதில் அனைத்து நேரங்களிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியாவிட்டாலும் எங்கள் நோக்கம் சரியாக இருக்கும்” என்று கூறினார்.



