ஃபெராரி கார் தங்க நட்சத்திரம் போன்ற விராட் கோலிக்கு.. இதான் அடுத்த டார்கெட்.. ஹைடன் பாராட்டு

Matthew Hayden 2
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்குகிறது. அவருடைய தலைமையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக கடைசி முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

எனவே அவர்களுடைய ஆட்டத்தை பார்க்க இருநாட்டு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடைசியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் சிறப்பாக விளையாடிய அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு முன் ரோஹித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது.

- Advertisement -

ஃபெராரி விராட் கோலி:

அதனால் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் 302 போட்டிகளில் 14000+ ரன்கள் அடித்துள்ள விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தங்க நட்சத்திரத்தைப் போன்றவர் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடன் பாராட்டியுள்ளார். 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதே விராட் கோலியின் அடுத்த இலக்காக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஹைடன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி உயர்தரமான ஃபெராரி போன்றவர். முழுமையாக சத்தங்களைக் கொண்டுள்ள அவர் ரசிகர்களை நோக்கி ஆதரவு கொடுக்குமாறு சைகைகளை செய்வார். களத்தில் அவர் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் நீங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் பார்க்கலாம். அவருடைய செயல்கள் மிகவும் பெரியது”

- Advertisement -

ஹைடன் பாராட்டு:

“அவரைப் பற்றிய உங்களுடைய கருத்தை சொல்லாமல் இருப்பது கடினமானது. ஏனெனில் அவர் அந்தளவுக்கு சிறந்த ஆட்டக்காரர். 302 போட்டிகளில் 14000 ரன்களை அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் கொண்டுள்ள பேட்டிங் சராசரி நம்ப முடியாததாக இருக்கிறது. தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் தயாராகும் முறைகளில் அவர் தங்க நட்சத்திரத்தைப் போன்றவர்”

இதையும் படிங்க: ஷாஹித் அப்ரிடியின் ஆல்டைம் சாதனையை உடைத்து வரலாறு படைக்க ஹிட்மேனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

“அடுத்ததாக 2027 உலகக் கோப்பையில் அவர் தன்னுடைய கவனத்தை வைத்துள்ளார் என்று நான் கருதுகிறேன். அவர் அத்தொடரில் அங்கமாக இருக்க விரும்புகிறார்” என்று கூறினார். இங்கே ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ள விராட் கோலி அதிக சதங்கள் அடித்த வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement