கடந்து மூன்று நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இந்த போட்டியை என்னால் மறக்க முடியாது. இந்த இரவு எனக்கு இனிமையான இரவு தோனி என்னை அருமையாக ஓட வைத்தார் என்று போஸ்ட் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவினை கோலி பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே தோனி ஓய்வு பெறுவதால் தான் இதுபோன்ற பதிவினை கோலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தோனி அன்றிரவே ஓய்வு அறிவிப்பை அறிவிக்க இருப்பதாகவும், அதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த போவதாகவும் தவறான வதந்திகள் பரவின. அதனை அடுத்து தோனி ரசிகர்கள் அனைவரும் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் அவர் இந்தியாவில் இல்லை என்றும் அமெரிக்காவில் இருக்கிறார் என்பது தெரிந்தும் தோனி ரசிகர்கள் அமைதியானார்கள். அதன்பிறகு தோனி குறித்த இந்த பதிவுக்கு தற்போது முதன்முறையாக கோலி தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் அந்தப் புகைப்படத்தினை பதிவிடும் பொழுது தோனி ஓய்வு குறித்து கருத்து எதுவும் யோசிக்க வில்லை.
அன்றைய நாளில் அந்த போட்டியின் முடிவு இருந்ததால் அந்த போட்டியை நான் மறக்கவே முடியாது என்ற காரணத்தினால் அந்த புகைப்படத்தை பதிவாக வெளியிட்டு என்னுடைய ஞாபகத்தை நான் வெளிப்படுத்தினே அதனைத் தவிர ஓய்வு குறித்த எண்ணம் எல்லாம் எனக்கு அந்த புகைப்படத்தை பதிவிடும்போது இருக்கவில்லை என்றும் அது ஒரு ஞாபகத்திற்கான ஆன புகைப்படம் என்றும் கோலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



