அவுட்ன்னு தெரிஞ்சும் நிரூபிக்கலன்னு கொடுக்கல.. அம்பயர் மீது ஜஸ்ப்ரித் பும்ரா அதிருப்தி.. நடந்தது என்ன?

Jasprit Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 270 ரன்களை முன்னிலை பெற்ற இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யுமாறு வெஸ்ட் இண்டீஸ்க்கு ஃபாலோ ஆன் கொடுத்தது.

- Advertisement -

கொடுக்கப்படாத அவுட்:

அதன் காரணமாக மீண்டும் ஆட்டத்தைத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் 10, அலிக் அதனாஸ் 7 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் ஜான் கேம்பல் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர். அதில் இந்தியாவுக்கு பெரிய சவாலைக் கொடுத்த கேம்பல் அரை சதத்தை அடித்து 94 ரன்களில் இருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்தை எதிர்கொண்டார்.

அதை அடிக்கத் தவறிய அவருடைய காலில் பந்து பட்டதைத் தொடர்ந்து இந்திய அணி அவுட் கேட்டார்கள். அதற்கு களத்தில் இருந்த நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் அவுட் வழங்காததால் இந்தியா ரிவ்யூ எடுத்தது. அதை 3வது நடுவர் சோதித்த போது ஒரே சமயத்தில் பந்து கால் மற்றும் பேட்டில் படுவது போல் தெரிந்தது. ஒன்றுக்கு 2 முறை சோதித்தும் தெளிவான காட்சி தெரியாததால் 3வது நடுவரும் நாட் அவுட் வழங்கினார்.

- Advertisement -

பும்ரா அதிருப்தி:

அதனால் ஏமாற்றமடைந்த ஜஸ்ப்ரித் பும்ரா. “அது அவுட். அது உங்களுக்கும் தெரியும். ஆனால் டெக்னாலஜியால் அதை நிரூபிக்க முடியவில்லை” என்று நடுவர் ரிச்சரிடம் ஏமாற்றுத்துடன் சொல்லிக்கொண்டே அடுத்த பந்தைப் போடச் சென்றார். ஏனெனில் அங்கே பந்து ஒரே சமயத்தில் கால் மற்றும் பேட்டில் படுவதாக தெரிகிறது. ஆனால் அச்சமயத்தில் ஜான் கேம்பல் பேட் முதலில் அவருடைய காலில் படுவது தெளிவாகத் தெரிந்தது.

இதையும் படிங்க: துருவ் ஜுரேலின் இந்த குணம் உண்மையிலேயே எங்களை வியக்க வைக்கிறது – அசிஸ்டன்ட் கோச் பேட்டி

அதனால் அவருடைய பேட் காலில் தடைபட்டு பக்கவாட்டில் செல்கிறது. மறுபுறம் பந்து நேராக அவருடைய காலில் படுகிறது. எனவே அது நிச்சயம் அவுட் என்று ஜஸ்ப்ரித் பும்ரா கருதினார். ஆனாலும் “டெக்னாலஜி நிரூபிக்கவில்லை என்பதற்காக விக்கெட் தராமல் மறுத்து விட்டீர்களே” என்று நடுவரிடம் பும்ரா அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதைப் பயன்படுத்திய கேம்பல் தனது முதல் சதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement