43 வயதானாலும் எதிரிகளிடம் பாய்ந்து சண்டை போட பிடிக்கும்.. காரணம் இதான்.. கம்பீர் ஓப்பன்டாக்

gautam gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். டெல்லியை சேர்ந்த அவர் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கணிசமாக அசத்தியுள்ள அவர் களத்தில் எதிரணி வீரர்களிடம் ஆக்ரோஷமாக சண்டையிட கூடியவராக அறியப்படுகிறார்.

குறிப்பாக பரம எதிரி நாடான பாகிஸ்தானின் சாஹித் அப்ரிடி, கம்ரான் அக்மல் ஆகியோரிடம் கெளதம் கம்பீர் மோதியதை மறக்க முடியாது. அதை விட ஐபிஎல் தொடரில் டெல்லியை சேர்ந்த தம்முடைய ஜூனியர் வீரரான விராட் கோலியுடன் அவர் போட்ட சண்டையை மறக்கவே முடியாது. அவை அனைத்தையும் விட ஓய்வுக்குப் பின் ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

43 வயதிலும் சண்டை:

அங்கே ஒரு போட்டியில் விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோரிடம் பலத்த சண்டை ஏற்பட்டது. அப்போது ஆலோசகராக சண்டையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கௌதம் கம்பீர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு விராட் கோலியுடன் சண்டையிட்டது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. தற்போது பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் 43 வயதில் கடந்த இங்கிலாந்து தொடரில் ஓவல் மைதானம் தயாரிப்பாளருடன் சண்டையில் ஈடுபட்டார்.

மொத்தத்தில் தமது கேரியர் முழுவதுமே கௌதம் கம்பீர் பல்வேறு தருணங்களில் வெவ்வேறு நபருடன் சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் 43 வயதானாலும் தமக்கு சண்டையிடுவது பிடிக்கும் என்ற வகையில் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். இருப்பினும் இப்போதெல்லாம் தமது வீட்டில் குழந்தைகள் பார்ப்பார்கள் என்பதால் சண்டையை குறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கம்பீர் வெளிப்படை:

இது பற்றி டெல்லியில் நடைபெறும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் கொடுத்த சிறப்பு பேட்டி பின்வருமாறு. “இப்போதும் நான் ஆக்ரோஷமாக இருக்கிறேன். ஆனால் தற்போது என்னிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது பதற்றமான சூழ்நிலையில் நான் முதலில் என்னுடைய உள்ளுணர்வுகளைப் பின்பற்ற முயற்சிக்கிறேன்”

இதையும் படிங்க: மன்னிச்சுடு தம்பி.. முஷீர் கானிடம் சாரி கேட்ட பிரிதிவி ஷா.. விரைவில் வெங்சர்கார் விசாரணை

“ஆனாலும் சண்டையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய முதல் ரியாக்சனாக இருக்கும். இருப்பினும் இப்போதெல்லாம் வயது அதிகரிப்பதால் நம்முடைய வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதே சண்டை போட வேண்டிய சூழ்நிலையில் என்னுடைய மனதிற்கு முதலாவதாக நினைவுக்கு வரும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2027 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement