சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
அபிஷேக் நாயரின் வார்த்தையை காப்பாற்றிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 10-ஆம் தேதியான இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது தற்போது தேநீர் இடைவேளை வரை ஒரு விக்கெட்டை இழந்து 220 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 162 பந்துகளை சந்தித்து 111 ரன்களையும், சாய் சுதர்சன் 132 பந்துகளை சந்தித்து 71 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
இன்னும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் 30 ஓவர்கள் வரை மீதி இருப்பதால் நிச்சயம் இந்திய அணி 300 ரன்களை கடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர் கூறியது போன்றே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக அபிஷேக் நாயர் அளித்த பேட்டி ஒன்றில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் அதிக ரன்களை குவிக்கும் வீரராக இருப்பார் என்று தனது கணிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க : சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 145 பந்துகளில் சதம் அடித்தது மட்டுமின்றி தற்போது பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



