வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அகமதாபாத் நாரில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு கேஎல் ராகுல் சதம் அடித்து தன்னுடைய பங்காற்றினார்.
முன்னதாக 2014இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கேஎல் ராகுல் 2024 வரை தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் அதிக வாய்ப்புகளை பெற்றும் ராகுல் சிறப்பாக விளையாடவில்லை என்று வெங்கடேஷ் பிரசாத் போன்ற முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கே.எல் ராகுல் தனது திறமைக்கு நிகராக விளையாடவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.
பொறுப்பாக மாறிய ராகுல்:
இருப்பினும் விராட், ரோஹித் ஆகியோர் ஓய்வுக்கு பின் ராகுல் மிகவும் பொறுப்புடன் விளையாடி வருகிறார் என்று சொல்லலாம். கடந்த இங்கிலாந்து தொடரில் 532 ரன்கள் எடுத்த அவர் இத்தொடரின் முதல் போட்டியிலும் சதத்தை அடித்துள்ளார். இந்நிலையில் இப்போதெல்லாம் விராட், ரோஹித், அஸ்வின் இல்லாததால் சீனியராக காரணத்தால் பொறுப்புடன் விளையாடுவதாக ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் கேப்டன் கில், பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் சீனியராக நீங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும் ராகுல் கூறியம்
அதற்கிணங்க செயல்படுவது பற்றி கேஎல் ராகுல் பேசியது பின்வருமாறு. “அது இயற்கையாக நடந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதைப்பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. அதே சமயம் என்னுடைய கேரியர் முழுவதும் இருந்த 2 – 3 சீனியர்கள் தற்போது இல்லாததை நான் மிஸ் செய்கிறேன். இங்கிலாந்து தொடரில் உடைமாற்றும் அறையில் நடக்கும் போது விராட், ரோகித், அஸ்வின் இல்லாதது எனக்கு கொஞ்சம் வினோதமாக இருந்தது”
மூவரை மிஸ் பண்றேன்:
“ஏனெனில் அவர்கள் எப்போதும் அங்கே இருந்தனர். இருப்பினும் தற்போது அவர்கள் இல்லாததால் நீங்கள் ஒரு சீனியர் வீரர் என்பதை உணர்கிறீர்கள். அதனால் நீங்கள் கொஞ்சம் பொறுப்புடன் களத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அப்போது தான் இளம் வீரர்கள் அதிகப்படியானப் பாரத்தை உணராமல் தங்களுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துவார்கள்”
இதையும் படிங்க: 146க்கு அவுட்.. வெ.இ அணியை 2.5 நாளில் அசால்ட்டாக சாய்த்த இந்தியா.. 23வது வருடமாக தொடர்ந்து வெற்றி நடை
“கௌதம் கம்பீர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் என்னிடம் கொஞ்சம் வித்தியாசமாக பேசத் துவங்கினார்கள். அது நாம் மிகப்பெரிய இடத்தை நிரப்ப முயற்சிக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொடுத்தது. எதுவாக இருந்தாலும் நாளின் இறுதியில் நான் என்னுடைய வேலையை செய்ய முயற்சிக்கிறேன். அதில் இதுவரை நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறினார்.



