51 ரன்ஸ்.. பவுலராக கலக்கிய ஆயுஷ் மாத்ரே.. ஆஸி மண்ணில் இளம் இந்தியா கோப்பையை வென்று அசத்தல்

IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர்-19 அணி அங்கே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் இயன் ஹீலி மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த விஹான் மல்கோத்ரா மற்றொரு துவக்க வீரர் வைபவ் சூர்யவன்சியுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

2வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தி அந்த ஜோடியில் சூரியவன்சி அரை சதத்தை 70 (68) ரன்களை அடித்து அவுட்டானார். அடுத்து வந்த வேதாந்தா திரிவேதி 2 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய மல்கோத்ரா தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 70 ரன்கள் குவித்து அவுட்டானார். மிடில் ஆர்டரில் அபிஞான் குண்டு அதிரடியாக விளையாடி 71 (64) ரன்கள் குவித்து அசத்தினார்.

இறுதியில் அம்ரிஷ் 14, கிளன் பட்டேல் 11, கனிஷ்க் 12 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா அண்டர்-19 அணி 49.4 ஓவரில் 300 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக யாஷ் தேஷ்முக் 2, வில் பைரோம் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கு அலெக்ஸ் டர்னர் 24, சைமன் பட்ஜ் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஆஸி மண்ணில் வெற்றி:

மிடில் ஆர்டரில் அலெக்ஸ் லீ 14, ஸ்டீவ் ஹோகன் 11, கேப்டன் தேஷ்முக் 1, ஜான் ஜேம்ஸ் ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் ஜெய்டேன் ட்ராப்பர் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 5 சிக்சருடன் சதத்தை அடித்த போது கேப்டன் ஆயுஷ் மாத்ரே சுழலில் 107 (72) ரன்களில் அவுட்டானார்.

அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஆரியன் சர்மாவையும் 38 (44) ரன்னில் மாத்ரே போல்டாக்கினார். இறுதியில் 47.2 ஓவரில் ஆஸ்திரேலியாவை 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா அண்டர்-19 அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் கடைசிப் போட்டிக்கு முன்பாகவே 2 – 0* (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் இத்தொடரை இளம் இந்தியா வென்றுள்ளது.

இதையும் படிங்க: சூரியகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக – அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை

சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற மாத்ரே தலைமையிலான இளம் இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவிலும் முத்திரை பதித்துள்ளது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே 3, கனிஷ்க் சௌஹான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement