கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த இந்திய அணியிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா அனுபவ வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதன்பிறகு முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
ரோஹித் சர்மாவின் இடத்தை சூரியகுமார் யாதவ் சரியாக நிரப்பியுள்ளார் : முகமது கைப்
ரோகித் சர்மாவின் ஓய்விற்கு பிறகு புதிய டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அப்படி சூரியகுமார் யாதவியின் தலைமையில் தற்போது விளையாடி வரும் இந்திய டி20 அணியானது இதுவரை 23 போட்டிகளில் விளையாடி 19 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரிலும் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.
மேலும் எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணியே ஆசிய கோப்பையை கைப்பற்றும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா விட்டுச்சென்ற கேப்டன்சி இடத்தை சூரியகுமார் யாதவ் டி20 போட்டிகளில் சரியாக நிரப்பியுள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் பாராட்டியுள்ளார்.
அதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : சூரியகுமார் யாதவால் பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பதை அவர் தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
அதோடு போட்டி முடிந்தும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறியது சரியான ஒன்று. ரோஹித் சர்மா டி20 அணியின் மிகச்சிறப்பான கேப்டனாக இருந்தார். அதனை தற்போது சூரியகுமார் யாதவ் மிகச்சரியாக கொண்டு செல்கிறார்.
இதையும் படிங்க : இன்னும் 4 விக்கெட் தான்.. ரவீந்திர ஜடேஜாவின் ஆல்டைம் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – குல்தீப் யாதவ்
அவருடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டுமே மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ஹார்திக் பாண்டியாவை புதுப்பந்தில் பந்துவீச அழைப்பது, அபிஷேக் சர்மாவை மிடில் ஓவர்களில் ஒன்று இரண்டு ஓவர்கள் வீச செய்வது, சுழற்பந்து வீச்சாளர்களை சரியான முறையில் கையாள்வது என அனைத்துமே அற்புதமாக இருப்பதாக முஹமது கைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



