2019இல் இதைப் பாத்து தான் அவர் கில்லுக்கு வாய்ப்பளித்தாரு.. தோனி, கோலி வியந்தாங்க.. சஞ்சய் பங்கர்

Sanjay bangar 2
- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இந்திய அணியின் வருங்கால ஆல் ஃபார்மட் கேப்டனாக பார்க்கப்படுகிறார். 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அதற்கடுத்த வருடம் சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து இந்தியாவின் மறக்க முடியாத வெற்றியில் பங்காற்றினார்.

அப்படியே கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அவர் 2023ஆம் ஆண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து அசத்தினார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதத்தை அடித்த அவரை ஒரு தரப்பினர் பிரின்ஸ் என்றழைத்தனர். இதற்கிடையே ஐபிஎல் தொடரிலும் கடந்த சீசனில் குஜராத்தை சிறப்பாக வழி நடத்திய அவர் பிளே ஆஃப் செல்ல பங்காற்றினார்.

- Advertisement -

எப்படி போட்டாலும் அடி:

அதனால் ரோஹித்தை கழற்றி விட்ட பிசிசிஐ சுப்மன் கில்லை புதிய டெஸ்ட் கேப்டனாக தேர்ந்தெடுத்தது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த அவர் நிறைய சாதனைகள் படைத்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவுகிறார். அதனால் ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலும் அவரை கேப்டனாக்க விரும்பும் பிசிசிஐ இப்போதே துணைக் கேப்டனாக நியமித்துள்ளது.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் வலைப்பயிற்சியிலேயே எப்படி போட்டாலும் சுப்மன் கில் அடித்ததைப் பார்த்த ரவி சாஸ்திரி நேரடியாக இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைக் கொடுத்ததாக சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இது பற்றி அப்போதைய பேட்டிங் பயிற்சியாளரான அவர் பேசியது பின்வருமாறு. “முதல் முறையாக கில் வலைப்பயிற்சிக்கு பேட்டிங் செய்ய வந்த போது ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக இருந்தார்”

- Advertisement -

வியந்த தோனி, கோலி:

“விராட் கோலி தலைமையில் தோனி இந்திய அணியில் இருந்தார். நாங்கள் 2019 உலகக் கோப்பைக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது பக்கவாட்டில் பந்தை எறிபவர்கள் மற்றும் நான் சுப்மன் கில்லுக்கு எதிராக பந்துகளை வீசத் துவங்கினோம். நாங்கள் பந்தை பிச்-அப் செய்யும் போது டிரைவ் அடித்த கில் கொஞ்சம் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய போது கட் அடித்தார்”

இதையும் படிங்க: 414 ரன்ஸ்.. இந்தியாவின் 2வது உலக சாதனையை சமன் செய்த இங்கிலாந்து.. பஸ்பால் ஸ்டைலில் தெ.ஆ’வுக்கு அடி

“கொஞ்சம் ஷார்ட்டாக போட்டால் ஃபுல் அடித்த அவர் மற்ற பேட்ஸ்மேன்கள் பயிற்சியை முடித்த போதிலும் தொடர்ந்து பயிற்சிகளை செய்தார். அவருடைய திறமைகளைப் பார்த்து அனைவருமே ஆச்சரியப்பட்டோம். குறிப்பாக மிகவும் ஈர்க்கப்பட்ட ரவி சாஸ்திரி அவரை பிளேயிங் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி தனது முதல் பயிற்சியிலேயே முத்திரையை பதித்த அந்தப் பையனை நாங்கள் சிறப்பு வாய்ந்தவர் என்று உணர்ந்தோம்” எனக் கூறினார்

Advertisement