சவுரவ் கங்குலிக்கு பிறகு சச்சின் டெண்டுல்கருக்கு கிடைக்கப்போகும் பி.சி.சி.ஐ-யின் உயர்பதவி – விவரம் இதோ

Ganguly and Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னாள் இந்திய வீரர் ரோஜர் பின்னி பதவி வகித்து வந்தார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பதவி வகித்திருந்த வேளையில் அவரது பதவிக்காலம் முடிந்த கையோடு முன்னாள் இந்திய வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி பெரும்பாலானோரது ஆதரவுடன் பிசிசிஐ-யின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சச்சின் டெண்டுல்கருக்கு கிடைக்கவுள்ள உயர்பதவி :

அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பி.சி.சி.ஐ-யின் தலைவராக பதவி வகித்து வந்த அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது. பிசிசிஐயின் விதிமுறைகளின் படி 70 வயதை கடந்த எந்த ஒரு நபரும் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்கிற ஒரு விதிமுறையின் அடிப்படையில் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து அண்மையில் விலகினார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்காலிக பிசிசிஐ தலைவராக துணை தலைவர் ராஜூவ் சுக்லா தற்போது பொறுப்பினை கையில் எடுத்துள்ளார். இதற்கிடையே அடுத்த புதிய பிசிசிஐ-யின் தலைவரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பிசிசிஐ-யின் இந்த புதிய தலைவருக்கான தேடலில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போட்டியின்றி தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரினை துவக்கி வைக்க சச்சின் டெண்டுல்கர் அங்கு சென்றிருந்தார்.

- Advertisement -

அப்போது இங்கிலாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த புதிய பதவிக்கான விவாதங்கள் நடைபெற்று உள்ளது என்றும் அதற்கு சச்சின் டெண்டுல்கரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் பிசிசிஐ-யின் புதிய தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மண்ணை கவ்விய பஸ்பால்.. 6க்கு 5 தோல்வி.. 2017க்குப்பின் 0 வெற்றி.. 27 வருடம் கழித்து இங்கிலாந்து தோல்வி

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக செயல்பட்டிருந்த வேளையில் அவருக்கு அடுத்து தற்போது சச்சினுக்கும் அந்த உயர்பதவி கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி அவர் பி.சி.சி.ஐ பதவியை ஏற்கும் பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆலோசகர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement