ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 அவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது.
ரஷீத் கான் நிகழ்த்திய சாதனை :
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் அடல் 64 ரன்களையும், இப்ராஹீம் ஜாத்ரான் 65 ரன்களையும் குவித்து அசத்தினார். பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
அவர் எடுத்த இந்த இரண்டு விக்கெட்டுகளின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் டிம் சவுதியை முந்தி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதற்கு முன்னதாக டி20 போட்டிகளில் அதிக விக்கெடுகளை கைப்பற்றிய வீரராக டீம் சவுதி 164 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார்.
தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ள ரஷித் கான் 165 விக்கெட்டுகளுடன் தற்போது முதல் இடத்திற்கு சென்றுள்ளார். தற்போது 26 வயதாகும் ரஷீத் தான் இன்னும் பல ஆண்டுகள் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவார் என்பதால் மிகப்பெரிய சாதனையையும் அவர் டி20 போட்டிகளில் நிகழ்த்துவார் என்று நம்பலாம்.
இதையும் படிங்க : 18 ரன்ஸ்.. டெய்ல் எண்டர் ரவூப் சாதனை போராட்டம்.. பாகிஸ்தானை சாய்த்த ஆப்கானிஸ்தான் கிண்டலுக்கு பதிலடி
எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் முன்னர் ரஷீத் கான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதால் ஆசிய கோப்பை தொடரிலும் அவர் அசத்துவார் என்பது உறுதி.



