ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்காக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது பலரையும் விமர்சிக்க வைத்தது. குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்து இந்தியா கோப்பை வெல்ல உதவினார்.
2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து கேப்டனாக ஃபைனல் அழைத்து சென்றார். அப்படிப்பட்ட அவருக்கு ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. அதற்கு பிசிசிஐ சுப்மன் கில்லை தங்களுடைய புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைப்பதே காரணமாகும்.
பிசிசிஐயின் பிஸ்னஸ் பிளான்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தை கழற்றி விட்ட பிசிசிஐ அவரை கேப்டனாக நியமித்தது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த கில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டிலும் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கில் வருங்காலங்களில் ரோஹித், சூரியகுமாருக்குப் பின் இந்தியாவை முழுமையாக தலைமைத் தாங்க உள்ளார்.
இந்நிலையில் சச்சின், தோனி, கோலி, ரோஹித் போல சுப்மன் கில்லை வருங்கால இந்திய கிரிக்கெட்டின் முகமாக மாற்றி பிராண்ட் மற்றும் ஃபிஸ்னஸை உருவாக்குவதற்காகவே பிசிசிஐ ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்ப்பதாக ராபின் உத்தாப்பா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில்லை டி20 கிரிக்கெட்டில் கொண்டு வந்துள்ளதால் அவர்கள் (பிசிசிஐ) தங்களுக்கு தாங்களே சில பிரச்சனைகளைக் கொண்டு வந்துள்ளனர்.
விளக்கும் உத்தப்பா:
“ஆனால் இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை அனைத்து தலைமுறைகளிலும் உங்களிடம் சூப்பர் ஸ்டார்கள் (கவாஸ்கர், சச்சின், கோலி) இருந்தனர். இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக அந்த குறிப்பிட்ட வீரரை அவர்கள் ஆதரித்தார்கள். அதே கதை தற்போதும் தொடரும் வகையில் பின்பற்றப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க: 23 பந்தில் 50.. மார்க்ரம் 9 வருட சாதனை.. இங்கிலாந்தை நொறுக்கிய தெ.ஆ 2வது பெரிய சாதனை வெற்றி
“இந்த முடிவின் பின்னணியில் மார்க்கெட்டிங், பிராண்டிங் மற்றும் பிஸ்னஸ் ரீதியான முன்னுரிமை ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால் தான் சுப்மன் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் அழைத்து வரப்பட்டுள்ளார். விளையாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல நீங்கள் சில சூப்பர் ஸ்டார்களை விரும்புகிறீர்கள். சுப்மன் கில் அவர்களில் ஒருவராக இருக்கப் போகிறார்” என்று கூறினார்.



